தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-68

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 10

சொல்வதற்கும் செயல்படுவதற்கும் முன்பு அறிந்துகொள்ளல்.

ஏனெனில், உயர்ந்தோனாகிய அல்லாஹ், “(நபியே!) நீர் அறிந்து கொள்வீராக: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை” (47:19) என்று கூறுகின்றான். இந்த வசனத்தில் அறிதலை இறைவன் முதலில் குறிப்பிட்டுள்ளான்.

அறிஞர்கள் இறைத்தூதர்களின் வாரிசுகள் ஆவர். அவர்கள் அறிவைத்தான் வாரிசுச் சொத்தாக விட்டுச்சென்றுள்ளார்கள். இந்த அறிவைப் பெற்றவரே நிறைவான பேற்றைப் பெற்றவர் ஆவார்.

கல்வியைத் தேடி ஒருவர் ஒரு வழியில் சென்றால், அவருக்குச் சொர்க்கத்திற்கான வழியை அல்லாஹ் எளிதாக்குகிறான்.

புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுபவர்கள் அறிஞர்கள் தான். (35:28)

அல்லாஹ் கூறுகின்றான்: (உதாரணங்களாக நாம் குறிப்பிட்ட) இவற்றை அறிஞர்களைத் தவிர (வேறெவரும்) புரிந்துகொள்ளமாட்டர். (29:43)

அல்லாஹ் கூறுகின்றான்: “நாங்கள் (அவரது போதனையை செவிதாழ்த்திக்) கேட்டிருந்தாலோ அல்லது அவற்றைப் புரிந்துகொண்டிருந்தாலோ (இன்று) நரகவாசிகளாய் நாங்கள் ஆகியிருக்கமாட்டோம்” என்று (இறைமறுப்பாளர்கள் மறுமையில்) கூறுவார்கள். (67:10)

அல்லாஹ் (மற்றொரு வசனத்தில்), “அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா?” (39:9) என்று வினவுகின்றான்.

“அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகிறானோ அவரை (மார்க்க விளக்கமுடைய) அறிஞராக்குகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்: அறிவு (வளர்ச்சி) என்பது கற்பதன் மூலமே கிடைக்கும்.

அபூதர் (ரலி) அவர்கள் தமது பிடரியைச் சுட்டிக்காட்டி, “இதன்மீது நீங்கள் உருவிய வாளை வைத்திருந்தாலும், நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஒரு செய்தியைச் சொல்ல நினைத்துவிட்டால், என்னை நீங்கள் கொல்வதற்குள் நான் அதைச் சொல்லி முடித்துவிடுவேன்” என்றார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(மக்களே!) ரப்பானிகளாய் (அதாவது) விவேகம் மிக்கவர்களாய் மார்க்கத்தின் சட்டதிட்டங்களைத் தெரிந்தவர்களாய் இருங்கள்” என்று கூறினார்கள். ‘ரப்பானீ’ என்பவர், மக்களுக்குப் பெரிய விஷயங்களைச் சொல்வதற்கு முன்னால் சிறிய விஷயங்களைப் படிப்படியாகப் பயிற்றுவிப்பவர் ஆவார் என்றும் கூறப்படுகிறது.

பாடம்: 11

மக்கள் சலிப்படைந்துவிடக் கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் (நிலைமை அறிந்து) பக்குவமாகப் போதனை செய்த தும் கல்வி புகட்டியதும்

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்களுக்குச் சலிப்பேற்பட்டுவிடக் கூடும் என்று அஞ்சி (தொடர்ச்சியாக இல்லாமல்) பல்வேறு நாட்களில் (விட்டு விட்டு) எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அறிவுரை வழங்குபவர்களாக இருந் தார்கள்.

அத்தியாயம்: 3

(புகாரி: 68)

بَابٌ : الْعِلْمُ قَبْلَ الْقَوْلِ وَالْعَمَلِ لِقَوْلِ اللهِ تَعَالَى { فَاعْلَمْ أَنَّهُ لا إِلَهَ إِلا اللهُ } فَبَدَأَ بِالْعِلْمِ ، وَأَنَّ الْعُلَمَاءَ هُمْ وَرَثَةُ الْأَنْبِيَاءِ وَرَّثُوا الْعِلْمَ ، مَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ ، وَمَنْ سَلَكَ طَرِيقًا يَطْلُبُ بِهِ عِلْمًا سَهَّلَ اللهُ لَهُ طَرِيقًا إِلَى الْجَنَّةِ .

وَقَالَ جَلَّ ذِكْرُهُ : { إِنَّمَا يَخْشَى اللهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ } وَقَالَ : { وَمَا يَعْقِلُهَا إِلا الْعَالِمُونَ } { وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ } وَقَالَ : { هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لا يَعْلَمُونَ } وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ يُرِدِ اللهُ بِهِ خَيْرًا يُفَهِّمْهُ [1/25] فِي الدِّينِ وَإِنَّمَا الْعِلْمُ بِالتَّعَلُّمِ .

وَقَالَ أَبُو ذَرٍّ : لَوْ وَضَعْتُمُ الصَّمْصَامَةَ عَلَى هَذِهِ وَأَشَارَ إِلَى قَفَاهُ ثُمَّ ظَنَنْتُ أَنِّي أُنْفِذُ كَلِمَةً سَمِعْتُهَا مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ أَنْ تُجِيزُوا عَلَيَّ لَأَنْفَذْتُهَا .

وَقَالَ ابْنُ عَبَّاسٍ { كُونُوا رَبَّانِيِّينَ } حُلَمَاءَ فُقَهَاءَ .

وَيُقَالُ : الرَّبَّانِيُّ الَّذِي يُرَبِّي النَّاسَ بِصِغَارِ الْعِلْمِ قَبْلَ كِبَارِهِ

بَابُ مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَخَوَّلُهُمْ بِالْمَوْعِظَةِ وَالْعِلْمِ كَيْ لَا يَنْفِرُوا

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ ، عَنِ الْأَعْمَشِ ، عَنْ أَبِي وَائِلٍ ، عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَخَوَّلُنَا بِالْمَوْعِظَةِ فِي الْأَيَّامِ؛ كَرَاهَةَ السَّآمَةِ عَلَيْنَا


Bukhari-Tamil-68.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-68.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.