பாடம் : 14
திருடனின் பாவமன்னிப்புக் கோரிக்கை17
ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
(திருட்டுக் குற்றம் புரிந்துவிட்ட ‘மக்ஸூமி’ குலத்தைச் சேர்ந்த ஃபாத்திமா பின்த் அஸ்வத் என்ற) ஒரு பெண்ணின் கையை நபி (ஸல்) அவர்கள் வெட்டச் செய்தார்கள். அதன் பிறகு, அவள் (எங்களிடம்) வந்து கொண்டிருந்தாள். அப்போது நான் அவளுடைய தேவையை நபி (ஸல்) அவர்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்வேன். அவள் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரி(த் திருந்தி)யிருந்தாள்.18
Book : 86
(புகாரி: 6800)بَابُ تَوْبَةِ السَّارِقِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ ، قَالَ: حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«قَطَعَ يَدَ امْرَأَةٍ» قَالَتْ عَائِشَةُ: وَكَانَتْ تَأْتِي بَعْدَ ذَلِكَ، فَأَرْفَعُ حَاجَتَهَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَتَابَتْ، وَحَسُنَتْ تَوْبَتُهَا
சமீப விமர்சனங்கள்