தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6804

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 17

மதம் மாறி வன்முறையில் ஈடுபட்டோருக்கு அவர்கள் சாகும்வரை தண்ணீர் தரப்பட வில்லை.

 அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

(ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு) உக்ல் குலத்தாரில் (பத்துக்கும் குறைவான) சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில் ஏழைகள் மற்றும் அகதிகளின் சாவடியாக அமைந்திருந்த) திண்ணையில் தங்கி இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு மதீனாவின் தட்பவெப்பநிலை ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, அவர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்குச் சிறிது (ஒட்டகப்) பால் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரின் (பொறுப்பிலிருக்கும்) ஒட்டகங்களை நீங்கள் சென்றடைவதைத் தவிர (வேறு வழி இருப்பதாக) நான் காணவில்லை’ என்று கூறினார்கள். எனவே, அவர்கள் அந்த ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்தி நலமும் உடல் வளமும் பெற்றனர். பிறகு (அந்த ஒட்டகங்களின்) மேய்ப்பரைக் கொலை செய்துவிட்டு ஒட்டக மந்தையை ஓட்டிச் சென்றுவிட்டனர். அப்போது இரைந்து சப்தமிட்டபடி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்(து நடந்ததைத் தெரிவித்)தார். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘உக்ல்’ குலத்தாரைப் பின்தொடர்ந்து சென்று அவர்களைப் பிடித்து வருவதற்காகச் சிலரை அனுப்பி வைத்தார்கள். பகல் பொழுது உச்சிக்கு வருவதற்குள் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பிடித்துக் கொண்டு வரப்பட்டார்கள். அப்போது ஆணிகளை பழுக்கக் காய்ச்சி கண் இமைகளின் ஓரங்களில் சூடிடுமாறு பணித்தார்கள். அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டச் செய்து அவர்களின் காயங்களுக்கு மருந்திடாமல் அப்படியே விட்டுவிடச் செய்தார்கள். பிறகு, மதீனாவின் புறநகரிலிருந்த ‘ஹர்ரா’ப் பகுதியில் அவர்கள் போடப்பட்டார்கள். அவர்கள் குடிப்பதற்கு நீர் கேட்டுக் கொண்டிருந்தனர். இறக்கும்வரை அவர்களுக்குக் குடிப்பதற்கு நீர் தரப்படவில்லை.

(அறிவிப்பாளர்) அபூ கிலாபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அவர்கள் திருடினார்கள்; கொலை செய்தார்கள்; அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராக வன்முறையில் ஈடுபட்டார்கள்.

Book : 86

(புகாரி: 6804)

بَابُ لَمْ يُسْقَ المُرْتَدُّونَ المُحَارِبُونَ حَتَّى مَاتُوا

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، عَنْ وُهَيْبٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:

قَدِمَ رَهْطٌ مِنْ عُكْلٍ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانُوا فِي الصُّفَّةِ، فَاجْتَوَوْا المَدِينَةَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَبْغِنَا رِسْلًا، فَقَالَ: «مَا أَجِدُ لَكُمْ إِلَّا أَنْ تَلْحَقُوا بِإِبِلِ رَسُولِ اللَّهِ» فَأَتَوْهَا، فَشَرِبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا، حَتَّى صَحُّوا وَسَمِنُوا وَقَتَلُوا الرَّاعِيَ وَاسْتَاقُوا الذَّوْدَ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّرِيخُ، فَبَعَثَ الطَّلَبَ فِي آثَارِهِمْ، فَمَا تَرَجَّلَ النَّهَارُ حَتَّى أُتِيَ بِهِمْ، فَأَمَرَ بِمَسَامِيرَ فَأُحْمِيَتْ، فَكَحَلَهُمْ، وَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ وَمَا حَسَمَهُمْ، ثُمَّ أُلْقُوا فِي الحَرَّةِ، يَسْتَسْقُونَ فَمَا سُقُوا حَتَّى مَاتُوا

قَالَ أَبُو قِلاَبَةَ: «سَرَقُوا وَقَتَلُوا وَحَارَبُوا اللَّهَ وَرَسُولَهُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.