பாடம் : 47 ஒரு காரணத்தை முன்னிட்டு ஒருவர் இமாமுக்குப் பக்கவாட்டில் நின்று தொழுவது.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தங்களின் நோயின்போது அபூ பக்ர்(ரலி) அவர்களை, தொழுகை நடத்தக் கட்டளையிட்டார்கள். அபுபக்ர்(ரலி) சில நாள்கள் தொழுகை நடத்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் தங்களின் நோய் சற்றுக் குறைந்ததை உணர்ந்து வெளியே வந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) மக்களுக்குத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்களை அபூ பக்ர்(ரலி) பார்த்ததும் பின்வாங்கலானார்கள். ‘அப்படியே இருங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) உடைய விலாப் புறத்தை ஒட்டி அமர்ந்தார்கள். அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களையும் மக்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களையும் பின்பற்றித் தொழுதனர்.
Book : 10
بَابُ مَنْ قَامَ إِلَى جَنْبِ الإِمَامِ لِعِلَّةٍ
حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، قَالَ: أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ
«أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَا بَكْرٍ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ فِي مَرَضِهِ»، فَكَانَ يُصَلِّي بِهِمْ، قَالَ عُرْوَةُ: فَوَجَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَفْسِهِ خِفَّةً، فَخَرَجَ، فَإِذَا أَبُو بَكْرٍ يَؤُمُّ النَّاسَ، فَلَمَّا رَآهُ أَبُو بَكْرٍ اسْتَأْخَرَ، فَأَشَارَ إِلَيْهِ: «أَنْ كَمَا أَنْتَ»، فَجَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِذَاءَ أَبِي بَكْرٍ إِلَى جَنْبِهِ، فَكَانَ أَبُو بَكْرٍ يُصَلِّي بِصَلاَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلاَةِ أَبِي بَكْرٍ
சமீப விமர்சனங்கள்