பாடம் : 32
திருமணமாகாத இருவர் (விபசாரம் புரிந்து விட்டால்) அவர்களுக்கு (நூறு) சாட்டையடிகளும், நாடுகடத்தலும் தண்டனையாக வழங்கப்படும்.
அல்லாஹ் கூறுகின்றான்: விபசாரம் செய்த பெண், விபசாரம் செய்த ஆண் ஆகிய இருவரில் ஒவ்வொருவருக்கும் நூறு சாட்டையடி வழங்குங்கள். மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்று)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட்டு விட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் இறைநம்பிக்கையாளர்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.
விபசாரம் செய்த ஆண் ஒரு விபசாரியையோ அல்லது இணைவைப்பவளையோ தவிர வேறு யாரையும் மணமுடிக்க மாட்டான். விபசாரியை, விபசாரம் செய்த ஓர் ஆண், அல்லது இணைவைப்பாளன் தவிர வேறு யாரும் மணமுடிக்கமாட்டர். இறைநம்பிக்கையாளர்களுக்கு இது தடை செய்யப்பட்டுள்ளது (24:2,3).
(இந்த வசனத்திலுள்ள) இரக்கம் ஏற்பட்டுவிடக் கூடாது’ என்பதற்கு இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் தண்டனைகளை நிலை நாட்டும் விஷயத்தில் இரக்கம் ஏற்பட்டு விடக் கூடாது’ என்று (விளக்கம்) கூறினார்கள்.
ஸைத் இப்னு காலித் அல்ஜுஹைனீ (ரலி) அறிவித்தார்.
மணமுடிக்காத நிலையில் விபசாரம் புரிந்துவிட்டவருக்கு நூறு கசையடிகள் கொடுத்து, அவரை ஓராண்டு காலம் நாடு கடத்தவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட கேட்டுள்ளேன்.46
Book : 86
(புகாரி: 6831)بَابُ البِكْرَانِ يُجْلَدَانِ وَيُنْفَيَانِ
{الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِنْهُمَا مِائَةَ جَلْدَةٍ وَلاَ تَأْخُذْكُمْ بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِنَ المُؤْمِنِينَ الزَّانِي لاَ يَنْكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ لاَ يَنْكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ وَحُرِّمَ ذَلِكَ عَلَى المُؤْمِنِينَ} قَالَ ابْنُ عُيَيْنَةَ: «رَأْفَةٌ فِي إِقَامَةِ الحَدِّ»
حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الجُهَنِيِّ، قَالَ:
سَمِعْتُ ” النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُ فِيمَنْ زَنَى وَلَمْ يُحْصَنْ: جَلْدَ مِائَةٍ وَتَغْرِيبَ عَامٍ
சமீப விமர்சனங்கள்