தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-685

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 49 குர்ஆனை (மனனமிட்டு) ஓதுவதில் பலர் சமமாக இருப்பார்களானால் அவர்களில் (வயதில்) பெரியவர் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும். 

 மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்.

இளைஞர்களான நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்களுடன் ஏறத்தாழ இருபது நாள்கள் தங்கியிருந்தோம். நபி(ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாக இருந்ததால் ‘நீங்கள் உங்கள் ஊர்களுக்குச் சென்று அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்!’ என்றும் இன்னின்ன தொழுகையை இன்னின்ன நேரத்தில் தொழுங்கள் என்றும் ‘தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லி, மூத்தவர் இமாமத் செய்ய வேண்டும்’ என்றும் கூறினார்கள்.
Book : 10

(புகாரி: 685)

بَابٌ: إِذَا اسْتَوَوْا فِي القِرَاءَةِ فَلْيَؤُمَّهُمْ أَكْبَرُهُمْ

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ مَالِكِ بْنِ الحُوَيْرِثِ، قَالَ

قَدِمْنَا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ شَبَبَةٌ، فَلَبِثْنَا عِنْدَهُ نَحْوًا مِنْ عِشْرِينَ لَيْلَةً، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَحِيمًا فَقَالَ: «لَوْ رَجَعْتُمْ إِلَى بِلاَدِكُمْ، فَعَلَّمْتُمُوهُمْ مُرُوهُمْ، فَلْيُصَلُّوا صَلاَةَ كَذَا فِي حِينِ كَذَا، وَصَلاَةَ كَذَا فِي حِينِ كَذَا، وَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ، فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.