தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6854

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 44

மானக்கேடான செயலையும் குற்றச் சாட்டையும் சந்தேகத்தையும் ஒருவர் சாட்சி இல்லாமல் வெளியிடுவது.

 ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவித்தார்.

அந்தத் தம்பதியர் இருவரும் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த இடத்தில் நானும் இருந்தேன். -அப்போது எனக்குப் பதினைந்து வயது நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் பிரிந்து கொள்ள உத்தரவிட்டார்கள். அப்போது அந்தப் பெண்ணின் கணவர், ‘இவளை நான் என்னிடமே (மனைவியாக) வைத்துக் கொண்டிருந்தால் நான் இவள் மீது சொன்ன குற்றச்சாட்டு பொய்யாகிவிடும்’ என்று கூறி (மணவிலக்கு அளித்து)விட்டார்.

சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) ‘அவள் இப்படி இப்படி (உருவம் கொண்ட) குழந்தையைப் பெற்றெடுத்தால் அவளுடைய கணவன் சொன்னது உண்மை. அவள் இப்படி இப்படி அரணையைப் போன்ற குழந்தையைப் பெற்றெடுத்தால் அவள் கணவன் சொன்னது பொய்’ என்று ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து நான் மனனமிட்டுள்ளேன்.

பிறகு, ‘அந்தப் பெண் அருவருக்கப்பட்ட தோற்றத்தில் குழந்தையைப் பெற்றெடுத்தாள்’ என்றும் அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.67

Book : 86

(புகாரி: 6854)

بَابُ مَنْ أَظْهَرَ الفَاحِشَةَ وَاللَّطْخَ وَالتُّهَمَةَ بِغَيْرِ بَيِّنَةٍ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ الزُّهْرِيُّ: عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ:

شَهِدْتُ المُتَلاَعِنَيْنِ وَأَنَا ابْنُ خَمْسَ عَشْرَةَ سَنَةً، فَرَّقَ بَيْنَهُمَا ، فَقَالَ زَوْجُهَا: كَذَبْتُ عَلَيْهَا إِنْ أَمْسَكْتُهَا ” قَالَ: فَحَفِظْتُ ذَاكَ مِنَ الزُّهْرِيِّ: ” إِنْ جَاءَتْ بِهِ كَذَا وَكَذَا فَهُوَ، وَإِنْ جَاءَتْ بِهِ كَذَا وَكَذَا، كَأَنَّهُ وَحَرَةٌ، فَهُوَ. وَسَمِعْتُ الزُّهْرِيَّ يَقُولُ: جَاءَتْ بِهِ لِلَّذِي يُكْرَهُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.