பாடம் : 11
அல்லாஹ் கூறுகின்றான்: தவறாக அன்றி, ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றோர் இறைநம்பிக்கையாளரைக் கொலை செய்வது அனுமதிக்கப்பட்டதன்று. அவ்வாறு தவறாக எவரேனும் ஓர் இறைநம்பிக்கையாளரைக் கொலை செய்து விட்டால் இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்வதும் கொல்லப்பட்டவரின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவதும் அதற்குப் பரிகாரமாகும்- அவருடைய குடும்பத்தார் (அதை மன்னித்து) தர்மமாக விட்டுவிட்டால் தவிர. அதாவது கொலையுண்டவர் உங்களுடைய எதிரி சமூகத்தைச் சேர்ந்த இறைநம்பிக்கையாளராக இருந்தால் அப்போது இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். (இழப்பீடு செலுத்த வேண்டிய தில்லை.)
கொலையுண்டவர் உங்களுடன் (சமாதான) உடன்படிக்கை செய்து கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பின், அவருடைய குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவதுடன் இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலையும் செய்ய வேண்டும். இவ்வாறு (அடிமையை விடுதலை) செய்ய இயலாத போது, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரும் பொருட்டு தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்றிட வேண்டும். அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் விவேகமிக்கவனாகவும் இருக்கின்றான். (4:92)
பாடம் : 12
ஒருவர் தாம் கொலை செய்ததாக ஒரே தடவை வாக்குமூலம் அளித்தாலும் அதைக் கொண்டே அவர் (பதிலுக்குக்) கொல்லப் படுவார்.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஒரு யூதன் ஒரு சிறுமியின் தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கிவிட்டான். அச்சிறுமியிடம், ‘உன்னை இப்படிச் செய்தவர் யார்? இன்னாரா? இன்னாரா?’ என்று (ஒவ்வொரு பெயராகச் சொல்லிக்) கேட்கப்பட்டது. இறுதியில் அந்த யூதனுடைய பெயர் சொல்லப்பட்டவுடன் அச்சிறுமி ஆம்; அவன்தான்’ என்று) தலையால் சைகை செய்தாள். எனவே, அந்த யூதன் (நபி(ஸல்) அவர்களிடம்) கொண்டுவரப்பட்டான். (அவனிடம் விசாரிக்கப்பட்டபோது) அவன் (குற்றத்தை) ஒப்புக் கொண்டான். எனவே, நபி(ஸல்) அவர்கள் அவனுடைய தலையைக் கல்லால் நசுக்கும்படி உத்தரவிட அவ்வாறே அவனுடைய தலை கல்லால் நசுக்கப்பட்டது. 20
ஹம்மாம் இப்னு யஹ்யா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ‘இரண்டு கற்களால் (நசுக்கப்பட்டது)’ என இடம் பெற்றுள்ளது.
Book : 87
(புகாரி: 6884)بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَمَا كَانَ لِمُؤْمِنٍ أَنْ يَقْتُلَ مُؤْمِنًا إِلَّا خَطَأً وَمَنْ قَتَلَ مُؤْمِنًا خَطَأً فَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ وَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ إِلَّا أَنْ يَصَّدَّقُوا فَإِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ وَإِنْ كَانَ مِنْ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ فَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ وَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ تَوْبَةً مِنَ اللَّهِ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا}
بَابُ إِذَا أَقَرَّ بِالقَتْلِ مَرَّةً قُتِلَ بِهِ
حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا حَبَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ:
أَنَّ يَهُودِيًّا رَضَّ رَأْسَ جَارِيَةٍ بَيْنَ حَجَرَيْنِ، فَقِيلَ لَهَا: مَنْ فَعَلَ بِكِ هَذَا، أَفُلاَنٌ، أَفُلاَنٌ؟ حَتَّى سُمِّيَ اليَهُودِيُّ، فَأَوْمَأَتْ بِرَأْسِهَا، فَجِيءَ بِاليَهُودِيِّ فَاعْتَرَفَ، فَأَمَرَ بِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرُضَّ رَأْسُهُ بِالحِجَارَةِ ” وَقَدْ قَالَ هَمَّامٌ: بِحَجَرَيْنِ
சமீப விமர்சனங்கள்