பாடம் : 21
ஒரு மனிதரை ஒரு கூட்டமே சேர்ந்து கொலை செய்துவிட்டாலோ காயப்படுத்தி விட்டாலோ அவர்கள் அனைவருமே தண்டிக்கப்படுவார்களா? பழிவாங்கப் படுவார்களா?34
முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் திருடிவிட்டார் என இரண்டு பேர் சாட்சியம் அளித்தனர். ஆகவே, அலீ (ரலி) அவர்கள் (குற்றம் சாட்டப்பட்ட) அவரது கையை வெட்டும்படி உத்தரவிட்டார்கள். பிறகு வேறொரு மனிதரை (சாட்சியம் அளித்த) அவ்விருவரும் அழைத்துவந்து (இவர் தாம் திருடியவர்; முதலில்) நாங்கள் கூறியது தவறு என்றனர். அப்போது அலீ (ரலி) அவர்கள் (முதல் மனிதருக்கெதிராக) அவர்கள் கூறிய சாட்சியத்தைச் செல்லாததாக்கினார்கள். மேலும், அந்த முதல் நபருக்காக அவர்கள் இருவரிடமும் இழப்பீடும் பெறப்பட்டது. அத்துடன், நீங்கள் இருவரும் திட்டமிட்டே (இவ்வாறு பொய்ச் சாட்சியம்) கூறினீர்கள் என்று நான் அறிந்திருந்தால் உங்கள் இருவரின் கைகளையும் வெட்டியிருப்பேன் என்றும் கூறினார்கள்.
இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.
ஒரு சிறுவன் வஞ்சித்துக் கொல்லப்பட்டான். அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘இந்தக் கொலையில் (யமனிலுள்ள) ஸன்ஆவாசிகள் அனைவரும் பங்கெடுத்துக் கொண்டிருந்தாலும் அவர்கள் அனைவரையும் நான் (பதிலுக்குக்) கொல்வேன்’ என்றார்கள்.
ஹகீம் அஸ்ஸன்ஆனி (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘நான்கு பேர் (சேர்ந்து) ஒரு சிறுவனைக் கொன்றுவிட்டனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்’ என்று வந்துள்ளது.
கன்னத்தில் ஓர் அறைவிட்ட குற்றத்திற்காக அபூ பக்ர் (ரலி) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) அலீ (ரலி), சுவைத் இப்னு முகர்ரின் (ரலி) ஆகீயோர் பழிவாங்கும்படி தீர்ப்பளித்தனர்.
சாட்டையால் ஓர் அடி அடித்த குற்றத்திற்காக உமர் (ரலி) அவர்கள் பழிவாங்கிடச் செய்தார்கள். மூன்று சாட்டையடிகளுக்காக அலீ (ரலி) அவர்கள் பழிவாங்கிடச் செய்தார்கள்.
(நீதிபதி) ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் சாட்டையடிக்கும் பிறாண்டி காயப்படுத்தியதற்கும் பழிக்குப்பழி தண்டனை வழங்குமாறு தீர்ப்பளித்தார்கள்.
Book : 87
(புகாரி: 6896)بَابُ إِذَا أَصَابَ قَوْمٌ مِنْ رَجُلٍ، هَلْ يُعَاقِبُ أَوْ يَقْتَصُّ مِنْهُمْ كُلِّهِمْ
وَقَالَ مُطَرِّفٌ، عَنِ الشَّعْبِيِّ: فِي رَجُلَيْنِ شَهِدَا عَلَى رَجُلٍ أَنَّهُ سَرَقَ، فَقَطَعَهُ عَلِيٌّ، ثُمَّ جَاءَا بِآخَرَ وَقَالاَ: أَخْطَأْنَا، فَأَبْطَلَ شَهَادَتَهُمَا، وَأُخِذَا بِدِيَةِ الأَوَّلِ، وَقَالَ: «لَوْ عَلِمْتُ أَنَّكُمَا تَعَمَّدْتُمَا لَقَطَعْتُكُمَا»
وَقَالَ لِي ابْنُ بَشَّارٍ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا،
أَنَّ غُلاَمًا قُتِلَ غِيلَةً، فَقَالَ عُمَرُ: «لَوِ اشْتَرَكَ فِيهَا أَهْلُ صَنْعَاءَ لَقَتَلْتُهُمْ» وَقَالَ مُغِيرَةُ بْنُ حَكِيمٍ، عَنْ أَبِيهِ: «إِنَّ أَرْبَعَةً قَتَلُوا صَبِيًّا»، فَقَالَ عُمَرُ: مِثْلَهُ وَأَقَادَ أَبُو بَكْرٍ، وَابْنُ الزُّبَيْرِ، وَعَلِيٌّ وَسُوَيْدُ بْنُ مُقَرِّنٍ مِنْ لَطْمَةٍ وَأَقَادَ عُمَرُ، مِنْ ضَرْبَةٍ بِالدِّرَّةِ وَأَقَادَ عَلِيٌّ، مِنْ ثَلاَثَةِ أَسْوَاطٍ وَاقْتَصَّ شُرَيْحٌ، مِنْ سَوْطٍ وَخُمُوشٍ
சமீப விமர்சனங்கள்