பாடம் : 22
அல்கஸாமா’ எனும் சத்தியம்.36
அஷ்அஸ் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், (வாதியான) உம்முடைய இரண்டு சாட்சிகள் தேவை. அல்லது (பிரதிவாதியான) அவருடைய சத்தியம் தேவை என்று சொன்னார்கள்.37
இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: முஆவியா (ரலி) அவர்கள் அல்கஸாமா’சத்தியத்தை ஏற்றுப் பழி வாங்கும்படி உத்தரவிடவில்லை. உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், தாம் பஸ்ரா நகருக்கு ஆளுநராக நியமித்திருந்த அதீ பின் அர்தாத் அவர்களுக்கு, நெய் வியாபாரிகளின் வீடுகளில் ஒன்றுக்கு அருகில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த ஒருவர் தொடர்பாக(ப் பின்வருமாறு) கடிதம் எழுதினார்கள்: கொல்லப்பட்டவரின் நண்பர்கள் சாட்சியத்தைக் கொண்டுவந்தால் சரி. அவ்வாறில்லையாயின், (சாட்சியில்லாமல் நீங்கள் தீர்ப்பளித்து) மக்களுக்கு அநீதியிழைத்துவிடாதீர்கள். இதைப் போன்ற வழக்குகளில் மறுமை நாள்வரை (சரியான) தீர்ப்பு வழங்க முடியாது.
ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா (ரலி) அறிவித்தார்.
என் குலத்தாரில் சிலர் கைபர் நோக்கிச் சென்றார்கள். அங்கே அவர்கள் தனித் தனியாகப் பிரிந்து விட்டார்கள். அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டுக் கிடக்கக் கண்டனர். அவர் கிடந்த இடத்தில் இருந்த (யூத) மக்களிடம் அவர்கள், ‘எங்கள் நண்பரை நீங்கள் (அநியாயமாகக்) கொன்றுவிட்டீர்கள்’ என்று கூறினர். (அந்த யூத) மக்கள் ‘நாங்கள் (அவரைக்) கொல்லவுமில்லை.
(அவரைக்) கொலை செய்தவர் யார் என எங்களுக்குத் தெரியவுமில்லை’ என்று கூறினர். எனவே (கைபர் சென்ற) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் கைபருக்குச் சென்றோம். அங்கு எங்களில் ஒருவர் கொல்லப்பட்டுக் கிடக்கக் கண்டோம்’ என்று கூறினர்.
அப்போது (பேச்சைத் துவங்கிய அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல் (ரலி) அவர்களை நோக்கி (நபி (ஸல்) அவர்கள், ‘பெரியவர்களைப் பேசவிடு! பெரியவர்களைப் பேசவிடு!’ என்று கூறினார்கள். பிறகு (கொல்லப்பட்டவர்களின் நண்பர்களைப் பார்த்து) நபி (ஸல்) அவர்கள், ‘அவரைக் கொலை செய்தவர் யார் என்பதற்குச் சாட்சி கொண்டுவாருங்கள்!’ என்று கூறினார்கள். அவர்கள், ‘எங்களிடம் சாட்சியில்லை’ என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், ‘அவ்வாறாயின் (யூதர்களான) அவர்கள் சத்தியம் செய்யட்டும்’ என்றார்கள். அதற்கு (கொல்லப்பட்டவரின் நண்பர்களான) அவர்கள், ‘யூதர்களின் சத்தியத்தை நம்பி) ஏற்றுக் கொள்ளமாட்டோம்’ என்று கூறினர்.
அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கொலையுண்டவரின் உயிரிழப்பை வீணாக்க விரும்பாமல் தாமே நூறு தர்ம ஒட்டகங்களை இழப்பீட்டுத் தொகையாக வழங்கினார்கள்.38
Book : 87
(புகாரி: 6898)بَابُ القَسَامَةِ
وَقَالَ الأَشْعَثُ بْنُ قَيْسٍ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «شَاهِدَاكَ أَوْ يَمِينُهُ» وَقَالَ [ص:9] ابْنُ أَبِي مُلَيْكَةَ: «لَمْ يُقِدْ بِهَا مُعَاوِيَةُ» وَكَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ العَزِيزِ، إِلَى عَدِيِّ بْنِ أَرْطَاةَ، وَكَانَ أَمَّرَهُ عَلَى البَصْرَةِ، فِي قَتِيلٍ وُجِدَ عِنْدَ بَيْتٍ مِنْ بُيُوتِ السَّمَّانِينَ: «إِنْ وَجَدَ أَصْحَابُهُ بَيِّنَةً، وَإِلَّا فَلاَ تَظْلِمُ النَّاسَ، فَإِنَّ هَذَا لاَ يُقْضَى فِيهِ إِلَى يَوْمِ القِيَامَةِ»
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ: – زَعَمَ أَنَّ رَجُلًا مِنَ الأَنْصَارِ يُقَالُ لَهُ – سَهْلُ بْنُ أَبِي حَثْمَةَ أَخْبَرَهُ:
أَنَّ نَفَرًا مِنْ قَوْمِهِ انْطَلَقُوا إِلَى خَيْبَرَ، فَتَفَرَّقُوا فِيهَا، وَوَجَدُوا أَحَدَهُمْ قَتِيلًا، وَقَالُوا لِلَّذِي وُجِدَ فِيهِمْ: قَدْ قَتَلْتُمْ صَاحِبَنَا، قَالُوا: مَا قَتَلْنَا وَلاَ عَلِمْنَا قَاتِلًا، فَانْطَلَقُوا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، انْطَلَقْنَا إِلَى خَيْبَرَ، فَوَجَدْنَا أَحَدَنَا قَتِيلًا، فَقَالَ: «الكُبْرَ الكُبْرَ» فَقَالَ لَهُمْ: «تَأْتُونَ بِالْبَيِّنَةِ عَلَى مَنْ قَتَلَهُ» قَالُوا: مَا لَنَا بَيِّنَةٌ، قَالَ: «فَيَحْلِفُونَ» قَالُوا: لاَ نَرْضَى بِأَيْمَانِ اليَهُودِ، فَكَرِهَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُبْطِلَ دَمَهُ، فَوَدَاهُ مِائَةً مِنْ إِبِلِ الصَّدَقَةِ
சமீப விமர்சனங்கள்