பாடம் : 23
ஒருவர் மற்றவர்களின் வீட்டுக்குள் (அவர்களுடைய அனுமதியில்லாமல்) எட்டிப் பார்க்க, அவர்கள் அவரது கண்ணைப் பழுதாக்கிவிட்டால் அவருக்காக இழப்பீடு கிடையாது.
அனஸ் (ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப் பார்த்தார். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் ‘கூர்முனையால்’ அல்லது ‘கூர்முனைகளால்’ அவருக்குத் தெரியாமல் அவரைக் குத்துவதற்காகச் சென்றார்கள். 43
Book : 87
(புகாரி: 6900)بَابُ مَنِ اطَّلَعَ فِي بَيْتِ قَوْمٍ فَفَقَئُوا عَيْنَهُ، فَلاَ دِيَةَ لَهُ
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ،
أَنَّ رَجُلًا اطَّلَعَ مِنْ حُجْرٍ فِي بَعْضِ حُجَرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَقَامَ إِلَيْهِ بِمِشْقَصٍ، أَوْ بِمَشَاقِصَ، وَجَعَلَ يَخْتِلُهُ لِيَطْعُنَهُ»
சமீப விமர்சனங்கள்