பாடம் : 24
இழப்பீடு வழங்கவேண்டியோர்46
அபூ ஜுஹைஃபா (ரலி) அறிவித்தார்.
நான் அலீ (ரலி) அவர்களிடம் (நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினராகிய) உங்களிடம் குர்ஆனில் இல்லாத ஏதேனும் (செய்தி) உள்ளதா?’ என்று கேட்டேன்.
-அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் சில வேளைகளில் ‘மக்களிடம் இல்லாத ஏதேனும் ஒன்று உங்களிடம் உள்ளதா?’ என்று அபூ ஜுஹைஃபா (ரலி) அவர்கள் கேட்டார்கள் என அறிவித்தார்கள்.
அதற்கு அலீ (ரலி) அவர்கள், ‘வித்துக்களைப் பிளந்தவனும் உயிரினங்களை உருவாக்கியவனுமான அல்லாஹ்வின் மீது சத்தியமாக! குர்ஆனில் இருப்பதைத் தவிர வேறெதுவும் (நபியின் குடும்பத்தாராகிய) எங்களிடம் இல்லை; இறைவேதத்தில் ஒரு மனிதருக்கு வழங்கப்படும் விளக்கத்தையும் இந்த ஏட்டில் உள்ளவற்றையும் தவிர’ என்று கூறினார்கள். நான், ‘இந்த ஏட்டில் என்ன இருக்கிறது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இழப்பீடு (தொடர்பான விளக்கங்கள்), போர்க் கைதியை விடுவித்தல், இறைமறுப்பாளனுக்காக ஒரு முஸ்லிம் கொல்லப்படக்கூடாது ஆகிய விஷயங்கள் இதிலுள்ளன’ என்றார்கள்.47
Book : 87
(புகாரி: 6903)بَابُ العَاقِلَةِ
حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الفَضْلِ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا مُطَرِّفٌ، قَالَ: سَمِعْتُ الشَّعْبِيَّ، قَالَ: سَمِعْتُ أَبَا جُحَيْفَةَ، قَالَ:
سَأَلْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ، هَلْ عِنْدَكُمْ شَيْءٌ مِمَّا لَيْسَ فِي القُرْآنِ؟ وَقَالَ مَرَّةً: مَا لَيْسَ عِنْدَ النَّاسِ؟ فَقَالَ: «وَالَّذِي فَلَقَ الحَبَّةَ وَبَرَأَ النَّسَمَةَ، مَا عِنْدَنَا إِلَّا مَا فِي القُرْآنِ، إِلَّا فَهْمًا يُعْطَى رَجُلٌ فِي كِتَابِهِ، وَمَا فِي الصَّحِيفَةِ» قُلْتُ: وَمَا فِي الصَّحِيفَةِ؟ قَالَ: «العَقْلُ، وَفِكَاكُ الأَسِيرِ، وَأَنْ لاَ يُقْتَلَ مُسْلِمٌ بِكَافِرٍ»
சமீப விமர்சனங்கள்