தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6910

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

ஹுதைல் குலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சண்டையிட்டுக் கொண்டனர். அவர்களில் ஒருத்தி மற்றொருததி மீது கல் எறிந்து அவளையும் அவளுடைய வயிற்றிலிருந்து சிசுவையும் கொன்றுவிட்டாள். எனவே, மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு வந்தனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் அவளுடைய சிசுவிற்கான இழப்பீடாக ஒர் ஆண் அடிமை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை வழங்கிட வேண்டும் என்றும், (கொல்லப்பட்ட) அந்தப் பெண்ணிற்கான இழப்பீட்டுத் தொகை கொலை செய்த பெண்ணின் தந்தை வழி உறவினர்களின் மீது கடமையாகுமென்றும் தீர்ப்பளித்தார்கள்.50

(புகாரி: 6910)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ المُسَيِّبِ، وَأَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ: أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:

اقْتَتَلَتِ امْرَأَتَانِ مِنْ هُذَيْلٍ، فَرَمَتْ إِحْدَاهُمَا الأُخْرَى بِحَجَرٍ فَقَتَلَتْهَا وَمَا فِي بَطْنِهَا، فَاخْتَصَمُوا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَقَضَى أَنَّ دِيَةَ جَنِينِهَا غُرَّةٌ، عَبْدٌ أَوْ وَلِيدَةٌ، وَقَضَى أَنَّ دِيَةَ المَرْأَةِ عَلَى عَاقِلَتِهَا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.