தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6911

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27

ஓர் அடிமையை, அல்லது (அடிமையல்லாத) சிறுவனை உதவியாளராக வைத்துக் கொள்ளல்.51

நபி (ஸல்) அவர்களின் துணைவியரான உம்மு சலமா (ரலி) அவர்கள் ஆரம்பப் பள்ளி ஆசிரியருக்கு ஆளனுப்பி, கம்பளியைப் பிரித்தெடுப்பதற்காகச் சில சிறுவர்களை அனுப்பிவையுங்கள்; அடிமையல்லாத எவரையும் என்னிடம் அனுப்பி விடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்கள் எனக் கூறப்படுகிறது.

 அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது அபூ தல்ஹா (ரலி) அவர்கள் என்னுடைய கையைப் பிடித்து அழைத்துச் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! அனஸ் புத்திசாலிப் பையன். அவன் தங்களுக்குப் பணிவிடை செய்யட்டும்’ என்றார்கள். அதன்படி நான் நபி (ஸல்) அவர்கள் ஊரிலிருக்கும் போதும் பயணத்தில் இருக்கும் போதும்  அவர்களுக்குப் பணிவிடை செய்து வந்தேன்.

அல்லாஹ்வின் மீதாணையாக! நான் செய்த எதைப் பற்றியும் ‘இதை ஏன் நீ இப்படிச் செய்தாய்?’ என்றோ, நான் செய்யாத எதைப் பற்றியும் ‘இதை ஏன் நீ இப்படிச் செய்யவில்லை?’ என்றோ நபியவர்கள் என்னிடம் கேட்டதில்லை.52

Book : 87

(புகாரி: 6911)

بَابُ مَنِ اسْتَعَانَ عَبْدًا أَوْ صَبِيًّا
وَيُذْكَرُ أَنَّ أُمَّ سَلَمَةَ، بَعَثَتْ إِلَى مُعَلِّمِ الكُتَّابِ: «ابْعَثْ إِلَيَّ غِلْمَانًا يَنْفُشُونَ صُوفًا، وَلاَ تَبْعَثْ إِلَيَّ حُرًّا»

حَدَّثَنِي عَمْرُو بْنُ زُرَارَةَ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ العَزِيزِ، عَنْ أَنَسٍ، قَالَ:

لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ، أَخَذَ أَبُو طَلْحَةَ بِيَدِي، فَانْطَلَقَ بِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَنَسًا غُلاَمٌ كَيِّسٌ فَلْيَخْدُمْكَ، قَالَ: «فَخَدَمْتُهُ فِي الحَضَرِ وَالسَّفَرِ فَوَاللَّهِ مَا قَالَ لِي لِشَيْءٍ صَنَعْتُهُ لِمَ صَنَعْتَ هَذَا هَكَذَا، وَلاَ لِشَيْءٍ لَمْ أَصْنَعْهُ لِمَ لَمْ تَصْنَعْ هَذَا هَكَذَا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.