பாடம் : 54 அடிமையும், விடுதலை செய்யப்பட்ட அடிமையும் தலைமை தாங்கித் தொழுகை நடத்துவது.
ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அவர்களுடைய அடிமையான தக்வான் என்பார் (தலைமை தாங்கித் தொழுவித்தால்) குர்ஆனைப் பார்த்தே ஓதுவார்.
தவறான உறவில் பிறந்தவன், கிராமவாசி, பருவடையாத சிறுவன் ஆகியோரும் (தலைமை தாங்கித் தொழுவித்தால் தொழுகை செல்லும்.) ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், (யார் தலைமை தாங்கித் தொழுவிக்க வேண்டும் என்பது குறித்துக் கூறுகையில்) அல்லாஹ்வுடைய வேதத்தை நன்றாக ஓதக் கூடியவர்கள் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும் என்று (பொதுப்படையாகவே) கூறியுள்ளார்கள்.
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
முதன் முறையாக மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ய வந்தவர்கள், குபா என்ற பகுதியிலுள்ள உஸ்பா என்ற இடத்தில் தங்கினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வருவதற்கு முன்புவரை அபூ ஹுதைபா(ரலி) அவர்களின், அடிமை, ஸாலிம் தாம் மக்களுக்கு இமாமாகத் தொழுகை நடத்தினார். அவர் குர்ஆனை அதிகம் ஓதியவராக இருந்தார்.
Book : 10
بَابُ إِمَامَةِ العَبْدِ وَالمَوْلَى
وَكَانَتْ عَائِشَةُ: «يَؤُمُّهَا عَبْدُهَا ذَكْوَانُ مِنَ المُصْحَفِ»
وَوَلَدِ البَغِيِّ وَالأَعْرَابِيِّ، وَالغُلاَمِ الَّذِي لَمْ يَحْتَلِمْ ” لِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَؤُمُّهُمْ أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ»
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، قَالَ: حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ
«لَمَّا قَدِمَ المُهَاجِرُونَ الأَوَّلُونَ العُصْبَةَ – مَوْضِعٌ بِقُبَاءٍ – قَبْلَ مَقْدَمِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَؤُمُّهُمْ سَالِمٌ مَوْلَى أَبِي حُذَيْفَةَ، وَكَانَ أَكْثَرَهُمْ قُرْآنًا»
சமீப விமர்சனங்கள்