தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6922

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2

இஸ்லாத்தை விட்டு வெளியேறிய ஆண், இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பெண் இருவரது சட்டமும் (ஒன்றா? வேறா? என்பது குறித்தும்) அவர்களை மனமாற்றம் காணச் செய்வது(குறித்து)ம்.

இப்னு உமர் (ரலி), ஸுஹ்ரீ (ரஹ்) மற்றும் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோர் இஸ்லாத்திலிருந்து வெளியேறிய பெண்ணுக்கும் மரண தண்டனை விதிக்கப்படும் என்று கூறினர்.6

அல்லாஹ் கூறுகின்றான்:

(அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு, இந்தத் தூதர் உண்மையானவர்தாம் என்று சாட்சியமும் அளித்த பிறகும், தெளிவான சான்றுகள் தம்மிடம் வந்துவிட்ட பிறகும் மறுத்துவிட்ட மக்களை அல்லாஹ் எப்படி நேர்வழியில் செலுத்துவான்? அல்லாஹ் (இத்தகைய) அக்கிரமக்கார சமூகத்தாரை நேரான வழியில் செலுத்த மாட்டான். இவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மனிதர்களின் சாபமும் உண்டு என்பதே இவர்களுக்குரிய கூலியாகும். இ(ந்தச் சாபத்)திலேயே அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவர். இவ்வேதனை அவர்களுக்குக் குறைக்கப்பட மாட்டாது. அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்பட மாட்டாது. ஆயினும், இதற்குப் பிறகு யார் பாவமன்னிப்புக் கோரி, தம்மைச் சீர்திருத்திக் கொண்டார்களோ, அத்தகையவர்களை நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக வும், (அவர்களுக்கு) மிக்க அருள் புரிபவனாகவும் இருக்கின்றான். நிச்சயமாக யார் இறைநம்பிக்கை கொண்ட பின் மறுத்துவிட்டு, அப்பால் (இறக்கும்வரை) இறைமறுப்பை அதிகமாக்கிக் கொண்டே சென்றனரோ,அவர்களின் (உதட்டளவிலான) பாவ மன்னிப்புக் கோரிக்கை ஒரு போதும் ஏற்கப்பட மாட்டாது. இவர்கள்தாம் வழிகேடர்கள். (3:86-90)

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் வேதம் வழங்கப்பட்டவர்களில் எந்தப் பிரிவி னருக்காவது வழிபட்டுவிடுவீர்களாயின், நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு உங்களை அவர்கள் நிராகரிப்பவர்களாகத் திருப்பிவிடுவார்கள். (3:100)

நிச்சயமாக யார் இறைநம்பிக்கை கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் இறைநம்பிக்கை கொண்டு,பின்னர் நிராகரித்து, பின்னர் அந்த நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை; மேலும் அவர்களை (நேர்) வழியில் செலுத்துபவனாகவும் இல்லை. (4:137)

நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரேனும் தமது மார்க்கத்திலிருந்து வெளியேறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை;) அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தைக் கொண்டு வருவான்; அவர்களை அவன் நேசிப்பான்; அவர்களும் அவனை நேசிப்பார்கள்; அவர்கள் இறைநம்பிக்கையாளர்களிடம் பணிவாக நடந்துகொள்வார்கள்; இறைமறுப்பாளர்களிடம் கடுமையாக இருப்பார்கள். (5:54)

எவர் இறைநம்பிக்கை கொண்ட பிறகு கட்டாயத்திற்குள்ளாகி, தமது உள்ளம் இறை நம்பிக்கையில் (சலனமின்றி) அமைதியுடன் இருக்கும் நிலையில் இறைமறுப்பை வெளியிடுகிறாரோ அவரைத் தவிர (அதாவது அவர் மீது குற்றமில்லை). ஆனால், யார் மன நிறைவுடன் இறைமறுப்பை ஏற்கிறார்களோ அவர்கள் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு. நிச்சயமாக அவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே அதிகமாக நேசிக்கிறார்கள்;மேலும், நிச்சயமாக அல்லாஹ் (தன்னை) மறுக்கும் கூட்டத்தாரை நேர் வழியில் செலுத்த மாட்டான். இத்தகையோருடைய இதயங்கள், செவிப்புலன், பார்வைகள் ஆகிய வற்றின் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். இவர்கள்தாம் (தம் இறுதி முடிவு பற்றி) அலட்சியமாயிருப்பவர்கள். சந்தேக மின்றி, இவர்கள் மறுமையில் முற்றிலும் நஷ்டமடைவார்கள். (16:106-109)

அவர்களுக்கு (மட்டும்) சக்தி இருந்தால், உங்களை உங்களது மார்க்கத்திலிருந்து திருப்பும்வரை உங்களுடன் அவர்கள் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள். (அப்படி) உங்களில் எவரேனும் தமது மார்க்கத்திலிருந்து திரும்பி இறைமறுப்பாளரான நிலையில் இறந்துவிட்டால் அவருடைய (நற்)செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துபோகும். இவர்கள் நரகவாசிகள்தாம். அதில் என்றென்றும் தங்கியிருப்பார்கள். (2:217)

 இக்ரிமா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

அலீ (ரலி) அவர்களிடம், இஸ்லாத்திலிருந்து வெளியேறிய(துடன் இஸ்லாத்திற்கும் அரசுக்கும் விரோதமாகச் செயல்பட்ட) சிலர் கொண்டு வரப்பட்டனர். அவர்களை அலீ (ரலி) அவர்கள் எரித்து (விடுமாறு உத்தர)விட்டார்கள். 7

இச்செய்தி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், ‘நானாக இருந்திருந்தால் அவர்களை எரித்திருக்கமாட்டேன். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அளிக்கிற (நெருப்பின்) வேதனையை அளித்து (எவரையும்) தண்டிக்காதீர்கள்’ என்று கூறினார்கள். மாறாக, நபி (ஸல்) அவர்கள், ‘தம் மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறவருக்கு மரணதண்டனை அளியுங்கள்’ என்று சொன்னதற்கேற்ப நான் அவர்களுக்கு மரணதண்டனை அளித்திருப்பேன்’ என்றார்கள்.8

Book : 88

(புகாரி: 6922)

بَابُ حُكْمِ المُرْتَدِّ وَالمُرْتَدَّةِ وَاسْتِتَابَتِهِمْ
وَقَالَ ابْنُ عُمَرَ وَالزُّهْرِيُّ، وَإِبْرَاهِيمُ: «تُقْتَلُ المُرْتَدَّةُ» وَقَالَ اللَّهُ تَعَالَى: {كَيْفَ يَهْدِي اللَّهُ قَوْمًا كَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ وَشَهِدُوا أَنَّ الرَّسُولَ حَقٌّ وَجَاءَهُمُ البَيِّنَاتُ وَاللَّهُ لاَ يَهْدِي القَوْمَ الظَّالِمِينَ أُولَئِكَ جَزَاؤُهُمْ أَنَّ عَلَيْهِمْ لَعْنَةَ اللَّهِ وَالمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ خَالِدِينَ فِيهَا لاَ يُخَفَّفُ عَنْهُمُ العَذَابُ وَلاَ هُمْ يُنْظَرُونَ إِلَّا الَّذِينَ تَابُوا مِنْ بَعْدِ ذَلِكَ وَأَصْلَحُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ إِنَّ الَّذِينَ كَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ ثُمَّ ازْدَادُوا كُفْرًا لَنْ تُقْبَلَ تَوْبَتُهُمْ وَأُولَئِكَ هُمُ الضَّالُّونَ} [آل عمران: 87] وَقَالَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تُطِيعُوا فَرِيقًا مِنَ الَّذِينَ أُوتُوا الكِتَابَ يَرُدُّوكُمْ بَعْدَ إِيمَانِكُمْ كَافِرِينَ} [آل عمران: 100] وَقَالَ: {إِنَّ الَّذِينَ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ ازْدَادُوا كُفْرًا لَمْ يَكُنِ اللَّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلاَ لِيَهْدِيَهُمْ سَبِيلًا} [النساء: 137] وَقَالَ: {مَنْ يَرْتَدَّ مِنْكُمْ عَنْ دِينِهِ فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى المُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الكَافِرِينَ} [المائدة: 54] وَقَالَ: {وَلَكِنْ مَنْ شَرَحَ بِالكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِنَ اللَّهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ ذَلِكَ بِأَنَّهُمُ اسْتَحَبُّوا الحَيَاةَ الدُّنْيَا عَلَى الآخِرَةِ وَأَنَّ اللَّهَ لاَ يَهْدِي القَوْمَ الكَافِرِينَ أُولَئِكَ الَّذِينَ طَبَعَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ وَأُولَئِكَ هُمُ الغَافِلُونَ لاَ جَرَمَ} [النحل: 106]- يَقُولُ: حَقًّا – {أَنَّهُمْ فِي الآخِرَةِ هُمُ الخَاسِرُونَ} [النحل: 109]- إِلَى – {لَغَفُورٌ رَحِيمٌ} [الأنعام: 165] {وَلاَ يَزَالُونَ يُقَاتِلُونَكُمْ حَتَّى يَرُدُّوكُمْ عَنْ دِينِكُمْ إِنِ اسْتَطَاعُوا وَمَنْ يَرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا [ص:15] خَالِدُونَ} [البقرة: 217]

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ مُحَمَّدُ بْنُ الفَضْلِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، قَالَ:

أُتِيَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ، بِزَنَادِقَةٍ فَأَحْرَقَهُمْ، فَبَلَغَ ذَلِكَ ابْنَ عَبَّاسٍ، فَقَالَ: لَوْ كُنْتُ أَنَا لَمْ أُحْرِقْهُمْ، لِنَهْيِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تُعَذِّبُوا بِعَذَابِ اللَّهِ» وَلَقَتَلْتُهُمْ، لِقَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ بَدَّلَ دِينَهُ فَاقْتُلُوهُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.