பாடம் : 4
இஸ்லாமிய அரசின்கீழ் வாழும் பிற மதத்தாரோ மற்றவர்களோ நபி (ஸல்) அவர்களை ஏசும் வகையில் அஸ்ஸாமு அலைக்கும்’ (உங்களுக்கு மரணம் நேரட்டும்) என்பதைப் போன்ற வார்த்தைகளை சாடைமாடையாகக் கூறினால்…?13
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.
ஒரு யூதன் இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து சென்றபோது, ‘அஸ்ஸாமு அலைக்க’ (உமக்கு மரணம் நேரட்டும்) எனக் கூறினான். அதற்கு (பதிலாக) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘வ அலைக்க’ (அவ்வாறே உனக்கு உண்டாகட்டும்) என்றார்கள். பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), ‘அவன் என்ன சொல்கிறான் என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டுவிட்டு, ‘அவன் ‘அஸ்ஸாமு அலைக்க’ (உங்களுக்கு மரணம் நேரட்டும்) என்று சொன்னான்’ என்றார்கள்.
மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவனை நாங்கள் கொல்ல வேண்டாமா?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘வேண்டாம். வேதக்காரர்கள் உங்களுக்கு சலாம் சொன்னால் (அதற்கு பதிலாக) நீங்கள் ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிடுங்கள்’ என்றார்கள்.
Book : 88
(புகாரி: 6926)بَابُ إِذَا عَرَّضَ الذِّمِّيُّ وَغَيْرُهُ بِسَبِّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يُصَرِّحْ، نَحْوَ قَوْلِهِ: السَّامُ عَلَيْكَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الحَسَنِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ:
مَرَّ يَهُودِيٌّ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: السَّامُ عَلَيْكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَعَلَيْكَ» فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَتَدْرُونَ مَا يَقُولُ؟ قَالَ: السَّامُ عَلَيْكَ ” قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَلاَ نَقْتُلُهُ؟ قَالَ: ” لاَ، إِذَا سَلَّمَ عَلَيْكُمْ أَهْلُ الكِتَابِ، فَقُولُوا: وَعَلَيْكُمْ
சமீப விமர்சனங்கள்