தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6958

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றுக்கான கடமையை (ஸகாத்தை) நிறைவேற்றவில்லையானால் மறுமை நாளில் அவை அவரின் மீது ஏவிவிடப்படும். அவை தம் கால் குளம்புகளால் அவரின் முகத்தில் மிதிக்கும்.

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.10

சிலர் கூறுகிறார்கள்: ஒருவரிடம் ஒட்டகங்கள் இருந்தன. அவற்றுக்குத் தாம் ஸகாத் கொடுக்க வேண்டிவந்துவிடும் என்று அஞ்சிய அவர், (ஓராண்டு பூர்த்தியாவதற்கு) ஒருநாள் முன்பாக அந்த ஒட்டகங்களை அதே அளவு ஒட்டகங்களுக்கு, அல்லது ஆடுகளுக்கு, அல்லது மாடுகளுக்கு, அல்லது திர்ஹங்களுக்கு பதிலாக விற்றுவிட்டார். தந்திரமாக ஸகாத்திலிருந்து தப்பிப்பதற்காக இவ்வாறு அவர் செய்தால் அவரின் மீது (ஸகாத்) எதுவும் கடமையாகாது. (ஏனெனில், பழையதை விற்றுப் புதிதாக வாங்கப்பட்ட பொருள் கைக்கு வந்து ஓராண்டு கழிந்த பின்பே அதற்கு ஸகாத் கடமையாகும்.)

இவ்வாறு கூறும் இவர்கள் ‘ஓராண்டு பூர்த்தியாவதற்கு ஒரு நாள் அல்லது ஓராண்டிற்கு முன்பே தம் ஒட்டகங்களுக்கான ஸகாத்தை அவர் கொடுத்தால் அது செல்லும்’ என்றும் கூறுகிறார்கள்.11

Book :90

(புகாரி: 6958)

وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِذَا مَا رَبُّ النَّعَمِ لَمْ يُعْطِ حَقَّهَا تُسَلَّطُ عَلَيْهِ يَوْمَ القِيَامَةِ، فَتَخْبِطُ وَجْهَهُ بِأَخْفَافِهَا»

وَقَالَ بَعْضُ النَّاسِ: ” فِي رَجُلٍ لَهُ إِبِلٌ، فَخَافَ أَنْ تَجِبَ عَلَيْهِ الصَّدَقَةُ، فَبَاعَهَا بِإِبِلٍ مِثْلِهَا أَوْ بِغَنَمٍ أَوْ بِبَقَرٍ أَوْ بِدَرَاهِمَ، فِرَارًا مِنَ الصَّدَقَةِ بِيَوْمٍ احْتِيَالًا، فَلاَ بَأْسَ عَلَيْهِ. وَهُوَ يَقُولُ: إِنْ زَكَّى إِبِلَهُ قَبْلَ أَنْ يَحُولَ الحَوْلُ بِيَوْمٍ أَوْ بِسِتَّةٍ جَازَتْ عَنْهُ





இதன் அறிவிப்பாளர்தொடர் முன் சென்ற ஹதீஸ் எண் 6957 இல் உள்ளது போன்று தான்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.