பாடம் : 9
(தந்திரம் செய்து) அடிமைப் பெண்ணை அபகரித்தல்.
ஒருவர் (அடுத்தவருக்குச் சொந்தமான) ஓர் அடிமைப் பெண்ணை அபகரித்துக் கொண்டார். பின்னர் அவள் இறந்து விட்டதாக அவர் கருதியதால், இறந்துபோன அடிமைப் பெண்ணுக்கான விலையை (அடிமையின் உரிமையாளரிடம்) வழங்கிட வேண்டுமெனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் அவளை அவளுடைய உரிமையாளர் (உயிருடன்) கண்டார் எனில், அவள் உரிமையாளருக்கே உரியவள் ஆவாள். அவர் (தாம் பெற்ற) அந்த விலைத் தொகையைத் திருப்பிச் செலுத்திவிடுவார். அத்தொகை (அடிமைப் பெண்ணுக்குரிய) கிரயம் என்று (கருதி அவள் விற்கப்பட்டுவிட்டதாக) எடுத்துக்கொள்ளலாகாது.
ஆனால், சிலர், அந்த அடிமைப் பெண் அபகரித்தவருக்கே உரியவள்; ஏனெனில், உரிமையாளர் (அபகரித்தவரிடமிருந்து உரிய) தொகையைப் பெற்றுக் கொண்டுவிட்டார் என்று கூறுகிறார்கள். ஆனால்,இது ஒரு விதத் தந்திரமாகும். அடுத்தவருக்குச் சொந்தமான அடிமைப் பெண்ணை ஒருவர் விரும்பலாம்;உரிமையாளர் அவளை விற்பதற்கு முன்வராத போது, அவளை அபகரித்துக் கொண்டுவிட்டு, அவள் இறந்துபோனாள் என்று காரணம் காட்டி, அவளுக்குரிய கிரயத்தை உரிமையாளர் ஏற்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கலாம். இதன் மூலம் அபகரித்தவனுக்கே தாரளமாக அடுத்தவரின் அடிமைப் பெண் கிடைக்கும் நிலை உருவாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் உடைமைகள் உங்களுக்குப் புனிதமானவை ஆகும்.19
மோசடி செய்கின்ற ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் ஒரு (அடையாளக்) கொடி இருக்கும்.20
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் கொடி ஒன்று உண்டு. அதைக் கொண்டு அந்த மோசடிக்காரன் அடையாளம் காணப்படுவான்.
என இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.21
Book : 90
(புகாரி: 6966)بَابُ إِذَا غَصَبَ جَارِيَةً فَزَعَمَ أَنَّهَا مَاتَتْ، فَقُضِيَ بِقِيمَةِ الجَارِيَةِ المَيِّتَةِ، ثُمَّ وَجَدَهَا صَاحِبُهَا فَهِيَ لَهُ، وَيَرُدُّ القِيمَةَ وَلاَ تَكُونُ القِيمَةُ ثَمَنًا
وَقَالَ بَعْضُ النَّاسِ: الجَارِيَةُ لِلْغَاصِبِ، لِأَخْذِهِ القِيمَةَ. وَفِي هَذَا احْتِيَالٌ لِمَنِ اشْتَهَى جَارِيَةَ رَجُلٍ لاَ يَبِيعُهَا، فَغَصَبَهَا، وَاعْتَلَّ بِأَنَّهَا مَاتَتْ، حَتَّى يَأْخُذَ رَبُّهَا قِيمَتَهَا، فَيَطِيبُ لِلْغَاصِبِ جَارِيَةَ غَيْرِهِ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمْوَالُكُمْ عَلَيْكُمْ حَرَامٌ» وَلِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يَوْمَ القِيَامَةِ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يَوْمَ القِيَامَةِ يُعْرَفُ بِهِ»
சமீப விமர்சனங்கள்