தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-11810

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எந்த ஒரு இறைநம்பிக்கையுள்ள அடியாருக்கும், அவர் ஒரு நேரத்திற்கு பின் மறுநேரம் செய்யும் ஒரு பாவம் இருக்கும்.

அல்லது அவர் மரணிக்கின்றவரை அவரை விட்டுப் பிரியாத ஒரு பாவம் இருக்கும். இறை நம்பிக்கையாளர் (பாவம் எனும் குழப்பத்தில்) ஆழ்த்தப்பட்டு; அவர் மறந்துவிட்டால் அறிவுறுத்தப்படும்போது அதை உணர்ந்து; பாவமன்னிப்பு கேட்பவராகவே படைக்கப்பட்டுள்ளார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

 

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 11810)

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْعَبَّاسِ الرَّازِيُّ، ثنا أَحْمَدُ بْنُ أَبِي سُرَيْجٍ الرَّازِيُّ، ثنا عَلِيُّ بْنُ حَفْصٍ الْمَدَائِنِيُّ، ثنا عُبَيْدٌ الْمُكْتِبُ الْكُوفِيُّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

مَا مِنْ عَبْدٍ مُؤْمِنٍ إِلَّا وَلَهُ ذَنْبٌ يَعْتادُهُ: الْفَيْنَةَ بَعْدَ الْفَيْنَةِ، أَوْ ذَنْبٌ هُوَ مُقِيمٌ عَلَيْهِ لَا يُفَارِقُهُ حَتَّى يُفَارِقَ، إِنَّ الْمُؤْمِنَ خُلِقَ مُفْتَنًا تَوَّابًا نَسِيًّا إِذَا ذُكِّرَ ذَكَرَ


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-11810.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.




  • இந்தச் செய்தியை ஹைஸமீ, அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    போன்றோர் சரியானது என்று கூறியிருந்தாலும் இந்தச் செய்தியை விரிவாக ஆய்வு செய்த முஹம்மத் அம்ர் பின் அப்துல்லதீஃப் என்ற அறிஞர் இதை பலவீனமானது என்று கூறியுள்ளார்.

இதில் இடம்பெறும் ராவீ-27735-உபைத் அல்முக்திப் என்பவர் இக்ரிமா (ரஹ்) அவர்களின் மாணவர் அல்ல; இவர் இக்ரிமா (ரஹ்) அவர்களிடம் ஹதீஸைக் கேட்டதில்லை. முக்திப் என்ற பெயரில் உள்ள வேறு ஒருவர்தான் இவரிடம் ஹதீஸைக் கேட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தக் கருத்து சரியானதல்ல என்றும் கூறியுள்ளார்…


1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • 1 . அலீ பின் ஹஃப்ஸ் —> உபைத் —> இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-, தல்கீஸுல் முதஷாபிஹ்-,

  • 2 . அப்துல்லாஹ் பின் துகைன் —> கைஸ் அல்மாஸிர் —> தாவூத் அல்பஸரீ —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அல்முன்தகப்-அப்து பின் ஹுமைத்-, ஷுஅபுல் ஈமான்-,

  • 3 . ஜஃபர் பின் அபூவஹ்ஷிய்யா —> ஸயீத் பின் ஜுபைர் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, முஸ்னத் ஷிஹாப்-,

  • 4 . உத்பா பின் யக்ளான் —> தாவூத் பின் அலீ —> அலீ பின் அப்துல்லாஹ் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-, இப்னு அதீ-, ஹில்யதுல் அவ்லியா-,


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-605 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.