தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-700

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

உங்களில் சிறந்தவர் யாரெனில், (பாவங்களால்) குழப்பத்தில் ஆழ்த்தப்பட்டுப் பாவமீட்சி கோருகின்றவர்களே ஆவர்.

அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)

பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை, இந்த வார்த்தையில் அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார் என்று நாம் அறிகிறோம். இவரிடமிருந்து அறிவிக்கும் சிலர் இதை நபியின் சொல்லாகவும், வேறுசிலர் நபித்தோழரின் சொல்லாகவும் அறிவித்துள்ளனர். அப்துல்வாஹித் அவர்கள் இதை நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளார்.

(bazzar-700: 700)

حَدَّثَنَا عَبَّادُ بْنُ يَعْقُوبَ، قَالَ: نا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنِ النُّعْمَانِ بْنِ سَعْدٍ، عَنْ عَلِيٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«خِيَارُكُمْ كُلُّ مُفْتَنٍ تَوَّابٍ»

وَهَذَا الْحَدِيثُ لَا نَعْلَمُهُ يُرْوَى عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا اللَّفْظِ إِلَّا مِنْ حَدِيثِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنِ النُّعْمَانِ بْنِ سَعْدٍ، عَنْ عَلِيٍّ، وَقَدْ رَفَعَهُ بَعْضُ مَنْ نَقَلَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، وَبَعْضُهُمْ أَوْقَفَهُ، وَعَبْدُ الْوَاحِدِ أَوْقَفَهُ


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-700.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-653.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அம்ர் (அபூபக்ர்-பஸ்ஸார் இமாம்)

2 . அப்பாத் பின் யஃகூப்

3 . முஹம்மத் பின் ஃபுளைல்

4 . அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் அல்வாஸிதீ

5 . நுஃமான் பின் ஸஃத்

6 . அலீ (ரலி)


  • 1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-21458-அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் அல்வாஸிதீ, அல்கூஃபீ என்பவர் பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    ஸாஜீ போன்ற அறிஞர்கள் இவர் ஹதீஸில் நிராகரிக்கப்பட்டவர் என்றும்,
  • இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    போன்ற பல அறிஞர்கள் இவர் பலவீனமானவர் என்றும் விமர்சித்துள்ளனர்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/486, தக்ரீபுத் தஹ்தீப்-1/570)

  • 2 . மேலும் இதில் வரும் ராவீ-46605-நுஃமான் பின் ஸஃத் பின் ஹப்தா என்பவரிடமிருந்து இவரின் சகோதரி மகனான அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் மட்டுமே அறிவித்துள்ளார் என்பதால் இப்னு ஹஸ்ம் பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 456
    வயது: 72
    அவர்கள் இவரை ஆதாரமாக ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளார். இதனடிப்படையில் இவர் அறியப்படாதவர் ஆவார்.
  • ஆனால் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள், இவரை சுமாரானவர் என்று கூறியதாக அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்கள் அறிவித்துள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/231, தக்ரீபுத் தஹ்தீப்-1/570, அத்தத்யீல்-881)

(மேலும் இதில் வரும் அப்பாத் பின் யஃகூப் என்பவர் பற்றி கருத்துவேறுபாடு உள்ளது.)

இதில் இடம்பெறும் அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவரால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


1 . இந்தக் கருத்தில் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் —> நுஃமான் பின் ஸஃத் —> அலீ (ரலி)

பார்க்க: அத்துஆ-ளப்பீ-39 , அஸ்ஸுஹ்த்-ஹன்னாத்-2/457 , முஸ்னத் பஸ்ஸார்-700 , முஸ்னத் ஷிஹாப்-1271 , ஷுஅபுல் ஈமான்-6718 , 6719 , 6720 , ஹதீஸு அஹ்லு ஹர்தான்-23 ,


  • அத்துஆ-ளப்பீ-39.

الدعاء للضبي (ص: 204)
39 – حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ، عَنِ النُّعْمَانِ بْنِ سَعْدٍ، عَنْ عَلِيٍّ عَلَيْهِ السَّلَامُ قَالَ: «خِيَارُكُمْ كُلُّ مُفَتَّنٍ تَوَّابٍ»


  • அஸ்ஸுஹ்த்-ஹன்னாத்-2/457.

الزهد لهناد بن السري (2/ 457)
حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنِ النُّعْمَانِ بْنِ سَعْدٍ، عَنْ عَلِيٍّ قَالَ: «خِيَارُكُمْ كُلُّ مُفَتَّنٍ تَوَّابٌ»


  • முஸ்னத் ஷிஹாப்-1271.

مسند الشهاب القضاعي (2/ 239)
1271 – أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الْعَبَّاسِ، أبنا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، ثنا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ، ثنا يُوسُفُ بْنُ كَامِلٍ، ثنا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ، ثنا النُّعْمَانُ بْنُ سَعْدٍ، قَالَ سَمِعْتُ عَلِيًّا، عَلَيْهِ السَّلَامُ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خِيَارُكُمْ كُلُّ مُفْتَنٍ تَوَّابٍ»


  • ஹதீஸு அஹ்லு ஹர்தான்-இப்னு அஸாகிர்-23.

حديث أهل حردان لابن عساكر (ص: 83)
23 – أَخْبَرَنَا أَبُو الْقَاسِمِ هِبَةُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الشَّيْبَانِيُّ، أَخْبَرَنَا الْقَاضِي أَبُو الْقَاسِمِ عَلِيُّ بْنُ الْمُحَسِّنِ بْنِ عَلِيٍّ التَّنُوخِيُّ فِي رِجَبَ سَنَةِ تِسْعٍ وَثَلاثِينَ وَأَرْبَعِمِائَةٍ، أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ حَسَّانَ بْنِ الْقَاسِمِ الْجَدِيلِيُّ الدِّمِمِّيُّ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ سُلَيْمَانَ الْحَضْرَمِيُّ مُطَيَّنٌ، أَخْبَرَنَا يَحْيَى – يَعْنِي ابْنَ عَبْدِ الْحَمِيدِ الْحِمَّانِيُّ -، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنِ النُّعْمَانِ بْنِ سَعْدٍ عَنْ عَلِيٍّ عَلَيْهِ السَّلامُ
عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:إِنَّ اللَّهَ – تَبَارَكَ وَتَعَالَى – يُحِبُّ كُلَّ مُفَتَّنٍ تَوَّابٍ“.


இந்த நூல்களில், இந்தச் செய்தி மேற்கண்ட அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவர் வழியாக வந்துள்ளது என்பதால் இவை பலவீனமானவையாகும்.


العلل الكبير للترمذي = ترتيب علل الترمذي الكبير (ص: 366)
680 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَرِيفٍ , حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ , عَنِ النُّعْمَانِ بْنِ سَعْدٍ , عَنْ عَلِيٍّ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خِيَارُكُمْ كُلُّ مَفْتَنٍ تَوَّابٌ»
قَالَ أَبُو عِيسَى رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ , عَنِ النُّعْمَانِ بْنِ سَعْدٍ , عَنْ عَلِيٍّ مَوْقُوفًا. وَحَدِيثُ ابْنِ فُضَيْلٍ عِنْدِي وَهْمٌ

மேலும் இந்தச் செய்தியை அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவரிடமிருந்து அறிவிக்கும் பலர் இதை அலீ (ரலி) அவர்களின் சொல்லாக அறிவித்துள்ளனர். முஹம்மத் பின் ஃபுளைல் மட்டுமே இதை தவறாக நபியின் சொல்லாக அறிவித்துள்ளார் என்று திர்மிதீ இமாம் கூறியுள்ளார்.

(நூல்: இலலுத் திர்மிதீ-680)

என்றாலும் திர்மிதீ இமாமுக்கு பிறகு வந்த நூலாசிரியர்களில் சிலர் இந்தச் செய்தியை அப்துல்வாஹித் பின் ஸியாத், இஸ்மாயீல் பின் ஸகரிய்யா, முஹம்மத் பின் காஸிம் (அபூமுஆவியா)  ஆகியோரும் முஹம்மத் பின் ஃபுளைல் போன்று நபியின் சொல்லாக அறிவித்துள்ளதை பதிவு செய்துள்ளனர். இதன் அனைத்து அறிவிப்பாளர்தொடர்களில் பலவீனமானவர்களே இடம்பெறுவதால் இவை தவறானவை என்பதால் பலவீனமானவையாகும்.

மேலும் அத்துஆ-ளப்பீ-39 இல் முஹம்மத் பின் ஃபுளைல் அவர்கள், இதை அலீ (ரலி) அவர்களின் சொல்லாகவே அறிவித்துள்ளார். இவ்வாறே அப்துல்வாஹித், அபூமுஆவியா ஆகியோரும் ஆரம்ப நூல்களில் அலீ (ரலி) அவர்களின் சொல்லாகவே அறிவித்துள்ளனர். எனவே இந்த தவறுகளுக்கு காரணம் அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் அல்லது இவர் வழியாக அறிவிக்கும் அறிவிப்பாளர்களாகத்தான் இருக்க முடியும்.


  • அவ்வாம் பின் ஹவ்ஷப் —> ஒரு மனிதர் —> அலீ (ரலி)

பார்க்க: அத்தவ்பா-இப்னு அபுத்துன்யா-177.

التوبة لابن أبي الدنيا (ص: 134)
177 – حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ الْهَرَوِيُّ، أنبا هُشَيْمٌ، أنبا الْعَوَّامُ بْنُ حَوْشَبٍ، عَمَّنْ حَدَّثَهُ عَنْ عَلِيٍّ، قَالَ: خِيَارُكُمْ كُلُّ مُفْتَنٍ تَوَّابٍ “، قِيلَ: فَإِنْ عَادَ؟ قَالَ: «يَسْتَغْفِرُ اللَّهَ وَيَتُوبُ» ، قِيلَ: فَإِنْ عَادَ؟ قَالَ: «يَسْتَغْفِرُ اللَّهَ وَيَتُوبُ» ، قِيلَ: حَتَّى مَتَى؟ قَالَ: «حَتَّى يَكُونَ الشَّيْطَانُ هُوَ الْمَحْسُورَ»

அலீ (ரலி) அவர்கள், உங்களில் சிறந்தவர் யாரெனில், (பாவங்களால்) குழப்பத்தில் ஆழ்த்தப்பட்டுப் பாவமீட்சி கோருகின்றவரே ஆவார் என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், அவர் மீண்டும் பாவம் செய்தால் என்ன செய்வது என்று அவர்களிடம் கேட்கப்பட்டது.  அதற்கவர்கள், அவர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டு அவனிடமே திரும்ப வேண்டும் என்று கூறினார்கள். அவர் மீண்டும் பாவம் செய்தால் என்ன செய்வது என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போதும் அவர்கள், முன்பு போன்று கூறினார்கள். எதுவரை இவ்வாறு என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ஷைத்தானே களைப்படைந்து விடும் வரை (அவர் இவ்வாறே பாவமன்னிப்புக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்) என்று பதிலளித்தார்கள்.

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் அலீ (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவர் யாரென அறியப்படவில்லை என்பதால் இது நபித்தோழரின் கூற்று என்பதுடன் பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

  • ஜஃபர் பின் புர்கான் —> காலித் பின் அபூஇஸ்ஸா —> அலீ (ரலி)

பார்க்க: அஸ்ஸுஹ்த்-ஹன்னாத்-2/458.

الزهد لهناد بن السري (2/ 458)
حَدَّثَنَا الْمُحَارِبِيُّ، عَنْ جَعْفَرِ بْنِ بُرْقَانَ، عَنْ خَالِدِ بْنِ أَبِي عَزَّةَ أَنَّ عَلِيًّا أَتَاهُ رَجُلٌ , فَقَالَ: مَا تَرَى فِي رَجُلٍ أَذْنَبَ ذَنْبًا قَالَ: «يَسْتَغْفِرُ اللَّهَ وَيَتُوبُ إِلَيْهِ» قَالَ: قَدْ فَعَلَ , ثُمَّ عَادَ. قَالَ: ” يَسْتَغْفِرُ اللَّهَ وَيَتُوبُ إِلَيْهِ. قَالَ: قَدْ فَعَلَ , ثُمَّ عَادَ. قَالَ: «يَسْتَغْفِرُ اللَّهَ , ثُمَّ يَتُوبُ إِلَيْهِ» , فَقَالَ لَهُ فِي الرَّابِعَةِ: قَدْ فَعَلَ , ثُمَّ عَادَ , فَقَالَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ: «حَتَّى مَتَى» ، ثُمَّ قَالَ: «يَسْتَغْفِرُ اللَّهَ وَيَتُوبُ إِلَيْهِ وَلَا يَمَلُّ حَتَّى يَكُونَ الشَّيْطَانُ هُوَ الْمَحْسُورُ»

ஒருவர் அலீ (ரலி) அவர்களிடம் வந்து, பாவம் செய்துவிட்ட ஒரு மனிதர் குறித்து நீங்கள் என்று கருதுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கவர்கள், அவர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டு அவனிடமே திரும்ப வேண்டும் என்று கூறினார்கள். அவர் மீண்டும் பாவம் செய்தால் என்ன செய்வது என்று மீண்டும் கேட்டார். அப்போதும் அவர்கள், முன்பு போன்று கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை கேட்டபோதும் அவ்வாறே கூறினார்கள்.

அவர் நான்காவது தடவை கேட்டபோது, ஷைத்தானே களைப்படைந்து விடும் வரை (அவர் இவ்வாறே பாவமன்னிப்புக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்), சோர்ந்து விடக்கூடாது என்று அலீ (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் அலீ (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் காலித் பின் அபூஇஸ்ஸா என்பவர் பற்றிய குறிப்பை புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
    இறப்பு ஹிஜ்ரி 327
    வயது: 87
    ஆகியோர் பதிவு செய்துள்ளனர். என்றாலும் இவரைப் பற்றி குறையோ, நிறையோ கூறவில்லை. இவர் வழியாக வரும் சில செய்திகள் வேறு அறிவிப்பாளர்தொடரில் சரியாக வந்துள்ளது என்பதால் இவர் குறைந்த பட்சம் ஹஸன் தரமுடையவர் ஆவார்.
  • எனவே இது நபித்தோழரின் கூற்று என்பதுடன் ஹஸன் தர அறிவிப்பாளர்தொடராகும்.

பாவம் செய்தவர்கள், அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்துவிடாமல் பாவமன்னிப்புக் கேட்கவேண்டும் என்ற கருத்தில் சில குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் உள்ளன.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-605 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.