தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-701

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

முஆத் இப்னு ஜபல்(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தம் குழுவினரிடம் சென்று அவர்களுக்கு இமாமாகத் தொழுகை நடத்துவது வழக்கம். (ஒரு முறை) இஷாத் தொழுகை நடத்தும்போது ‘அல்பகரா’ அத்தியாயத்தை ஓதினார்கள். அப்போது ஒருவர்(தொழுகையை)விட்டும் விலகிச் சென்றார். (தொழுது முடித்ததும்) முஆத் இப்னு ஜபல்(ரலி) அவரைக் கண்டித்தார்கள். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தபோது ‘(நீரென்ன) குழப்பவாதியா?’ என்று மும்முறை நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி)ஜ நோக்கிக் கூறினார்கள். மேலும், நடுத்தரமான இரண்டு அத்தியாயங்களை ஓதித் தொழுமாறு அவருக்குக் கட்டளையிட்டார்கள்.

ஜாபிர்(ரலி) அவர்களிடமிருந்து இதை அறிவிக்கும் அம்ர் ‘அந்த இரண்டு அத்தியாயங்களை எவையென ஜாபிர்(ரலி) குறிப்பிட்டார்கள். அது எனக்கு நினைவில் இல்லை’ என்றும் குறிப்பிட்டார்கள்.
Book :10

(புகாரி: 701)

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ

كَانَ مُعَاذُ بْنُ جَبَلٍ يُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَرْجِعُ، فَيَؤُمُّ قَوْمَهُ، فَصَلَّى العِشَاءَ، فَقَرَأَ بِالْبَقَرَةِ، فَانْصَرَفَ الرَّجُلُ، فَكَأَنَّ مُعَاذًا تَنَاوَلَ مِنْهُ، فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «فَتَّانٌ، فَتَّانٌ، فَتَّانٌ» ثَلاَثَ مِرَارٍ – أَوْ قَالَ: «فَاتِنًا، فَاتِنًا، فَاتِنًا» – وَأَمَرَهُ بِسُورَتَيْنِ مِنْ أَوْسَطِ المُفَصَّلِ،

قَالَ عَمْرٌو: لاَ أَحْفَظُهُمَا





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.