பாடம் : 19 கனவில் பச்சை நிறம் மற்றும் பசுமையான பூங்காவைக் காண்பது.
கைஸ் இப்னு உபாத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நான் (மதீனா பள்ளிவாசலில்) ஓர் அவையில் அமர்ந்திருந்தேன். அதில் ஸஅத் இப்னு மாலிக்(ரலி) அவர்களும் இப்னு உமர்(ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள் (எங்களைக்) கடந்து சென்றார்கள். (அன்னாரைக் கண்ட) மக்கள், ‘இவர் சொர்க்கவாசிகளில் ஒருவர்’ என்று கூறினர். இதைக் கேட்ட நான் அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்களிடம் ‘(தங்களைக் குறித்து) மக்கள் இப்படி இப்படிக் கூறினர்’ என்று சொன்னேன்.
(அதற்கு) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள், ‘அல்லாஹ் தூயவன். தமக்குத் தெரியாத ஒன்றைக் குறித்து அவர்கள் கூறுவது முறையல்ல. (மக்கள் இவ்வாறு பேசிக் கொள்வதற்குக் காரணம், நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) நான் கண்ட கனவுதான். (அதில்) பசுமையான பூங்கா ஒன்றில் தூண் நடப்பட்டு இருந்தது. அத்தூணின் மேற்பகுதியில் பிடியொன்று காணப்பட்டது. அதன் கீழ் பகுதியில் சிறிய பணியாள் ஒருவர் இருந்தார். அப்போது (என்னிடம்) ‘இதில் ஏறுங்கள்’ என்று சொல்லப்பட்டது. உடனே நான் (அதில்) ஏறி அந்தப் பிடிப்பை பற்றினேன். பிறகு நான் இக்கனவு குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முன்னிலையில் விவரித்தேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அப்துல்லாஹ்(பின் சலாம்), (இறை நம்பிக்கை எனும்) பலமான பிடியைப் பற்றியவராக இறப்பார்’ என்றார்கள். 26
Book : 91
(புகாரி: 7010)بَابُ الخُضَرِ فِي المَنَامِ، وَالرَّوْضَةِ الخَضْرَاءِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الجُعْفِيُّ، حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ عُمَارَةَ، حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ: قَالَ قَيْسُ بْنُ عُبَادٍ
كُنْتُ فِي حَلْقَةٍ فِيهَا سَعْدُ بْنُ مَالِكٍ وَابْنُ عُمَرَ، فَمَرَّ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ، فَقَالُوا: هَذَا رَجُلٌ مِنْ أَهْلِ الجَنَّةِ، فَقُلْتُ لَهُ: إِنَّهُمْ قَالُوا كَذَا وَكَذَا، قَالَ: سُبْحَانَ اللَّهِ، مَا كَانَ يَنْبَغِي لَهُمْ أَنْ يَقُولُوا مَا لَيْسَ لَهُمْ بِهِ عِلْمٌ، إِنَّمَا رَأَيْتُ كَأَنَّمَا عَمُودٌ وُضِعَ فِي رَوْضَةٍ خَضْرَاءَ فَنُصِبَ فِيهَا، وَفِي رَأْسِهَا عُرْوَةٌ، وَفِي أَسْفَلِهَا مِنْصَفٌ، وَالمِنْصَفُ الوَصِيفُ، فَقِيلَ: ارْقَهْ، فَرَقِيتُهُ حَتَّى أَخَذْتُ بِالعُرْوَةِ، فَقَصَصْتُهَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَمُوتُ عَبْدُ اللَّهِ وَهُوَ آخِذٌ بِالعُرْوَةِ الوُثْقَى»
சமீப விமர்சனங்கள்