தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7023

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 31

கனவில் அரண்மனையைக் காண்பது

அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

நாங்கள் (ஒருநாள்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்திருந்தோம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னைச் சொர்க்கத்தில் கண்டேன். அங்கு ஓர் அரண்மனைக்கு அருகில் ஒரு பெண் அங்கசுத்தி (உளூ) செய்துகொண்டிருந்தாள். நான், (வானவர்களிடம்) ‘இந்த அரண்மனை யாருக்குரியது?’ என்றேன். அதற்கவர்கள், ‘உமருக்குரியது’ என்றார்கள். அப்போது (அதனுள் நுழைந்து பார்க்க எண்ணினேன். ஆனால்,) எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வரவே (அதனுள் நுழையாமல்) திரும்பி வந்து விட்டேன்’ என்றார்கள்.

இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் (ஆனந்தத்தால்) அழுதுவிட்டு ‘இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்!’ என்றார்கள்.

Book : 91

(புகாரி: 7023)

بَابُ القَصْرِ فِي المَنَامِ

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ المُسَيِّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: بَيْنَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

بَيْنَا أَنَا نَائِمٌ، رَأَيْتُنِي فِي الجَنَّةِ، فَإِذَا امْرَأَةٌ تَتَوَضَّأُ إِلَى جَانِبِ قَصْرٍ، قُلْتُ: لِمَنْ هَذَا القَصْرُ؟ قَالُوا: لِعُمَرَ بْنِ الخَطَّابِ، فَذَكَرْتُ غَيْرَتَهُ فَوَلَّيْتُ مُدْبِرًا ” قَالَ أَبُو هُرَيْرَةَ: فَبَكَى عُمَرُ بْنُ الخَطَّابِ ثُمَّ قَالَ: أَعَلَيْكَ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ، أَغَارُ؟


Bukhari-Tamil-7023.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-7023.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.