தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7102 & 7103 & 7104

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7102. & 7103. & 7104. அபூ வாயில்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

(ஜமல் போரின்போது பஸ்ராவுக்குச் செல்லுமாறு) மக்களைத் தூண்டும்படி கூஃபாவாசிகளிடம் அம்மார்(ருலி) அவர்களை அலீ(ரலி) அவர்கள் அனுப்பியிருந்தார்கள். அப்போது அம்மாரைச் சந்திக்க அபூ மூஸா(ரலி) அவர்களும் அபூ மஸ்ஊத்(ரலி) அவர்களும் வந்தார்கள். அவர்களிருவரும் (அம்மாரிடம்) ‘(ஆயிஷாவை எதிர்க்கும்) இந்த விஷயத்தில் நீங்கள் காட்டும் தீவிரத்தைத் தான் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து நீங்கள் செய்தவற்றிலேயே எங்களுக்கு அறவே பிடிக்காத செயலாக நாங்கள் கருதுகிறோம்’ என்றார்கள். அப்போது அம்மார்(ரலி) அவர்கள், ‘(அலீ(ரலி) அவர்களுடன் சேர்ந்து ஆயிஷா(ரலி) அவர்களுடன் சேர்ந்து ஆயிஷா(ரலி) அவர்களை எதிர்க்காமல்) இந்த விஷயத்தில் நீங்கள் காட்டும் தாமதத்தைத்தான் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து நீங்கள் இருவரும் செய்தவற்றிலேயே எனக்கு அறவே பிடிக்காத செயலாக கருதுகிறேன்’ என்றார்கள். பின்னர் அபூ மஸ்ஊத்(ரலி) அவர்கள் மற்ற இருவருக்கும் ஆளுக்கொரு அங்கியை மற்ற இருவருக்கும் ஆளுக்கொடு அங்கியை அணிவித்தார்கள். பிறகு அவர்கள் அனைவரும் பள்ளிவாசலுக்குச் சென்றார்கள்.

Book :92

(புகாரி: 7102 & 7103 & 7104)

حَدَّثَنَا بَدَلُ بْنُ المُحَبَّرِ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي عَمْرٌو، سَمِعْتُ أَبَا وَائِلٍ، يَقُولُ

دَخَلَ أَبُو مُوسَى وَأَبُو مَسْعُودٍ عَلَى عَمَّارٍ، حَيْثُ بَعَثَهُ عَلِيٌّ إِلَى أَهْلِ الكُوفَةِ يَسْتَنْفِرُهُمْ، فَقَالاَ: مَا رَأَيْنَاكَ أَتَيْتَ أَمْرًا أَكْرَهَ عِنْدَنَا مِنْ إِسْرَاعِكَ فِي هَذَا الأَمْرِ مُنْذُ أَسْلَمْتَ؟ فَقَالَ عَمَّارٌ: «مَا رَأَيْتُ مِنْكُمَا مُنْذُ أَسْلَمْتُمَا أَمْرًا أَكْرَهَ عِنْدِي مِنْ إِبْطَائِكُمَا عَنْ هَذَا الأَمْرِ» وَكَسَاهُمَا حُلَّةً حُلَّةً، ثُمَّ رَاحُوا إِلَى المَسْجِدِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.