தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7154

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11 நபி (ஸல்) அவர்களுக்கு வாயிற்காவலர் இருந்ததில்லை.

 ஸாபித் அல்புனானீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் தம் வீட்டாரில் ஒரு பெண்மணியிடம், ‘இன்ன பெண்ணை உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். அப்பெண்மணி, ‘ஆம் (தெரியும்)’ என்று கூறினார். அனஸ்(ரலி) கூறினார்: அவள் ஒரு மண்ணறை அருகே அழுதுகொண்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் அவளைக் கடந்து சென்றார்கள். அப்போது, ‘அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்! பொறுமையாக இரு’ என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்பெண், ‘என்னைவிட்டு விலகிச் செல்வீராக. எனக்கேற்பட்ட துன்பம் உமக்கேற்படவில்லை. (எனவேதான் இப்படிப் பேசுகிறீர்)’ என்று சொன்னாள். நபி(ஸல்) அவர்கள் (பேசாமல்) அவளைக் கடந்து சென்றார்கள். அப்போது ஒருவர் அவ்வழியே சென்றார். அவர், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உன்னிடம் என்ன சொன்னார்கள்?’ என்று கேட்டார். அப்பெண், ‘எனக்கு அவர் யாரென்றும் தெரியாது’ எனக் கூறினாள். அம்மனிதர், ‘அவர்கள்தாம் இறைத்தூதர்(ஸல்)’ என்று சொல்ல அவள், நபி(ஸல்) அவர்களின் வீட்டு வாசலுக்குச் சென்றாள். அங்கு அவள் வாயிற்காவலர் யாரையும் காணவில்லை. எனவே அவள், ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யாரென்று நான் அறியவில்லை’ என்று சொன்னாள். நபி(ஸல்) அவர்கள், ‘பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கைக்கொள்வதேயாகும்’ என்றார்கள்.17

Book : 93

(புகாரி: 7154)

بَابُ مَا ذُكِرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ لَهُ بَوَّابٌ

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا ثَابِتٌ البُنَانِيُّ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ

يَقُولُ لِامْرَأَةٍ مِنْ أَهْلِهِ: تَعْرِفِينَ فُلاَنَةَ؟ قَالَتْ: نَعَمْ، قَالَ: فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِهَا وَهِيَ تَبْكِي عِنْدَ قَبْرٍ، فَقَالَ: «اتَّقِي اللَّهَ، وَاصْبِرِي»، فَقَالَتْ: إِلَيْكَ عَنِّي، فَإِنَّكَ خِلْوٌ مِنْ مُصِيبَتِي، قَالَ: فَجَاوَزَهَا وَمَضَى، فَمَرَّ بِهَا رَجُلٌ فَقَالَ: مَا قَالَ لَكِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: مَا عَرَفْتُهُ؟ قَالَ: إِنَّهُ لَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَجَاءَتْ إِلَى بَابِهِ فَلَمْ تَجِدْ عَلَيْهِ بَوَّابًا، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، وَاللَّهِ مَا عَرَفْتُكَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الصَّبْرَ عِنْدَ أَوَّلِ صَدْمَةٍ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.