தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7184

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் அபூ வாயில்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் எங்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அஷ்அஸ்பின் கைஸ்(ரலி) அவர்கள் (அங்கு) வந்து (பின்வருமாறு) கூறினார்கள்: இந்த இறைவசனம் என் விஷயத்திலும் ஒரு கிணறு தொடர்பாக நான் வழக்கு தொடுத்திருந்த ஒருவர் விஷயத்திலும் தான் இறங்கிற்று. அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘உன்னிடம் ஆதாரம் எதுவும் இருக்கிறதா?’ என்று (என்னிடம்) கேட்டார்கள். நான் ‘இல்லை’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் ‘அப்படியென்றால் (பிரதிவாதியான) அவர் சத்தியம் செய்ய வேண்டியதுதான்’ என்று சொல்ல, நான் ‘அவர் (தயங்காமல்) சத்தியம் செய்துவிடுவார்’ என்று சொன்னேன். அப்போதுதான் இந்த (திருக்குர்ஆன் 03:77 வது) வசனம் அருளப்பெற்றது.48

Book :93

(புகாரி: 7184)

فَجَاءَ الأَشْعَثُ، وَعَبْدُ اللَّهِ يُحَدِّثُهُمْ، فَقَالَ: فِيَّ نَزَلَتْ وَفِي رَجُلٍ خَاصَمْتُهُ فِي بِئْرٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَلَكَ بَيِّنَةٌ؟»، قُلْتُ: لاَ، قَالَ: «فَلْيَحْلِفْ»، قُلْتُ: إِذًا يَحْلِفُ، فَنَزَلَتْ: {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ} [آل عمران: 77] الآيَةَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.