தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7189

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 35 அநீதியாகவோ அறிஞர்களின் முடிவுக்கு மாறாகவோ நீதிபதி தீர்ப்பளித்தால், அது செல்லாது.

 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களை பனூ ஜதீமா குலத்தாரிடம் (இஸ்லாத்தை எடுத்துக்கூறி அவர்களை அழைப்பதற்காக) அனுப்பினார்கள். அவர்களுக்கு ‘அஸ்லம்னா’ (‘நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோம்’) என்று திருத்தமாகச் சொல்லவரவில்லை. எனவே, அவர்கள், ‘ஸபஃனா’ ‘ஸபஃனா’ (‘நாங்கள் மதம் மாறி விட்டோம். நாங்கள் மதம் மாறிவிட்டோம்’) என்றார்கள். உடனே, காலித்(ரலி) அவர்கள் அம்மக்களைக் கொல்லவும் சிறைப்பிடிக்கவும் தொடங்கினார்கள். மேலும், எங்களில் ஒவ்வொருவரிடமும் அவரவரால் கைது செய்யப்பட்டவரை ஒப்படைத்தார்கள். மேலும், எங்களில் ஒவ்வொருவரும் தம்மிடமுள்ள கைதியைக் கொன்றுவிடும்படி உத்தரவிட்டார்கள். நான், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடமுள்ள கைதியைக் கொல்லமாட்டேன். என் தோழர்களில் எவரும் தம்மிடமுள்ள கைதியைக் கொல்லமாட்டார்’ என்று சொன்னேன். இதை நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் (சென்று) தெரிவித்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! ‘காலித் இப்னு வலீத்’ செய்த(த)வற்றுக்கும் எனக்கும் தொடர்பில்லையென்று உன்னிடம் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று இருமுறை சொன்னார்கள்.55

Book : 93

(புகாரி: 7189)

بَابُ إِذَا قَضَى الحَاكِمُ بِجَوْرٍ، أَوْ خِلاَفِ أَهْلِ العِلْمِ فَهُوَ رَدٌّ

حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ بَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالِدًا ح وحَدَّثَنِي أَبُو عَبْدِ اللَّهِ نُعَيْمُ بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ

بَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالِدَ بْنَ الوَلِيدِ إِلَى بَنِي جَذِيمَةَ، فَلَمْ يُحْسِنُوا أَنْ يَقُولُوا أَسْلَمْنَا، فَقَالُوا: صَبَأْنَا صَبَأْنَا، فَجَعَلَ خَالِدٌ يَقْتُلُ وَيَأْسِرُ، وَدَفَعَ إِلَى كُلِّ رَجُلٍ مِنَّا أَسِيرَهُ، فَأَمَرَ كُلَّ رَجُلٍ مِنَّا أَنْ يَقْتُلَ أَسِيرَهُ، فَقُلْتُ: وَاللَّهِ لاَ أَقْتُلُ أَسِيرِي، وَلاَ يَقْتُلُ رَجُلٌ مِنْ أَصْحَابِي أَسِيرَهُ، فَذَكَرْنَا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «اللَّهُمَّ إِنِّي أَبْرَأُ إِلَيْكَ مِمَّا صَنَعَ خَالِدُ بْنُ الوَلِيدِ» مَرَّتَيْنِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.