தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7190

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 36 (சண்டையிட்டுக்கொள்ளும்) சமுதாயத்தாரி டையே நல்-ணக்கம் ஏற்படுத்துவதற்காக அவர்களிடம் ஆட்சித் தலைவர் செல்வது.

 ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

பனூ அம்ர் இப்னு அவஃப்) குலத்தாரிடையே மோதல் ஏற்பட்டிருந்த விவரம் நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது லுஹ்ருத் தொழுகையை நடத்திவிட்டு அவர்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காகச் சென்றார்கள். இதற்கிடையே அஸ்ருத் தொழுகையின் நேரம் வந்துவிடவே பிலால்(ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்பு (பாங்கு) கொடுத்தார்கள். பிறகு இகாமத் சொல்லிவிட்டு (நபியவர்கள் வெளியே சென்றுவிட்டதால்) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (தொழுகை நடத்துமாறு) கூறினார்கள். எனவே, அபூ பக்ர் (தொழுகை நடத்த) முன்னின்றார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் தொழுகையில் (இமாமாக) இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் (திரும்பி) வந்துவிட்டார்கள். (தொழுகை அணிகளை) விலக்கிக்கொண்டு வந்து (இமாமாக நின்று தொழுகை நடத்திக் கொண்டிருந்த) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்குப் பின்னாலுள்ள (முதல்) அணியில் நபி(ஸல்) அவர்கள் நின்றார்கள். இதைக் கண்ட மக்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு நினைவூட்டுவதற்காக) கைத் தட்டினார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் தொழுகத் தொடங்கிவிட்டால் அதை முடிக்கும் வரை திரும்பிப் பார்க்கவே மாட்டார்கள். ஆனால், மக்கள் நிறுத்தாமல் கைதட்டிக் கொண்டிருக்கக் கண்டபோது அபூ பக்ர்(ரலி) அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். தமக்குப் பின்னால் நபி(ஸல்) அவர்களைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் (அபூ பக்ர்(ரலி) அவர்களை நோக்கி) அங்கேயே நின்று தொழுகையைத் தொடருமாறு (தம் கையால்) சைகை செய்தார்கள். இதோ இவ்வாறுதான் தம் கரத்தால் சைகை செய்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் அங்கேயே சிறிது நேரம் இருந்து, நபி(ஸல்) அவர்கள் (தம்மைத் தொழுகை நடத்துமாறு) கூறியமைக்காக இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார்கள். பிறகு திரும்பாமல் அப்படியே பின்னோக்கி (முதல் அணிக்கு) நடந்தார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் முன்னே சென்று மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.

தொழுது முடிந்ததும், ‘அபூ பக்ரே! நான் உங்களுக்கு சைகை செய்தும் நீங்கள் தொழுகையைத் தொடராமல் இருந்ததற்குக் காரணம் என்ன?’ என்று கேட்டார்கள். ‘நபி(ஸல்) அவர்களுக்கே தலைமை தாங்கித் தொழுகை நடத்தும் தகுதி அபூ குஹாஃபாவின் மகனுக்கு (எனக்கு) இல்லை’ என்று அபூ பக்ர்(ரலி) கூறினார். பிறகு நபி(ஸல்) அவர்கள் மக்களிடம், ‘(தொழுகையில்) உங்களுக்கு சந்தேகம் ஏற்படுமானால் ஆண்களாயிருந்தால், அவர்கள் ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்று சொல்லட்டும். பெண்களாயிருந்தால், (இமாமின் கவனத்தை ஈர்ப்பதற்காகத்) கைத் தட்டட்டும்!’ என்றார்கள்.56

Book : 93

(புகாரி: 7190)

بَابُ الإِمَامِ يَأْتِي قَوْمًا فَيُصْلِحُ بَيْنَهُمْ

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَبُو حَازِمٍ المَدَنِيُّ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ

كَانَ قِتَالٌ بَيْنَ بَنِي عَمْرٍو، فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى الظُّهْرَ، ثُمَّ أَتَاهُمْ يُصْلِحُ بَيْنَهُمْ، فَلَمَّا حَضَرَتْ صَلاَةُ العَصْرِ، فَأَذَّنَ بِلاَلٌ وَأَقَامَ، وَأَمَرَ أَبَا بَكْرٍ فَتَقَدَّمَ، وَجَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ فِي الصَّلاَةِ، فَشَقَّ النَّاسَ حَتَّى قَامَ خَلْفَ أَبِي بَكْرٍ، فَتَقَدَّمَ فِي الصَّفِّ الَّذِي يَلِيهِ، قَالَ: وَصَفَّحَ القَوْمُ، وَكَانَ أَبُو بَكْرٍ إِذَا دَخَلَ فِي الصَّلاَةِ لَمْ يَلْتَفِتْ حَتَّى يَفْرُغَ، فَلَمَّا رَأَى التَّصْفِيحَ لاَ يُمْسَكُ عَلَيْهِ التَفَتَ، فَرَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَلْفَهُ، فَأَوْمَأَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، أَنِ امْضِهْ، وَأَوْمَأَ بِيَدِهِ هَكَذَا، وَلَبِثَ أَبُو بَكْرٍ هُنَيَّةً يَحْمَدُ اللَّهَ عَلَى قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ مَشَى القَهْقَرَى، فَلَمَّا رَأَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَلِكَ تَقَدَّمَ، فَصَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّاسِ، فَلَمَّا قَضَى صَلاَتَهُ، قَالَ: «يَا أَبَا بَكْرٍ مَا مَنَعَكَ إِذْ أَوْمَأْتُ إِلَيْكَ أَنْ لاَ تَكُونَ مَضَيْتَ؟» قَالَ: لَمْ يَكُنْ لِابْنِ أَبِي قُحَافَةَ أَنْ يَؤُمَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ لِلْقَوْمِ: «إِذَا رَابَكُمْ أَمْرٌ، فَلْيُسَبِّحِ الرِّجَالُ، وَلْيُصَفِّحِ النِّسَاءُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.