தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7195

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், யூதர்களின் (ஹீப்ரு அல்லது சிரியாக மொழி) எழுத்து வடிவைக் கற்றுக்கொள்ளும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே கற்றுக்கொண்டு, நபி(ஸல்) அவர்கள் (யூதர்களுக்கு) அனுப்பும் கடிதங்களை நான் எழுதிவந்தேன்; யூதர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு எழுதும் கடிதங்களை நபி(ஸல்) அவர்களுக்குப் படித்துக் காட்டி வந்தேன்.

உமர்(ரலி) அவர்கள் தம்மிடம் அலீ(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) மற்றும் உஸ்மான்(ரலி) ஆகியோர் இருக்க, (மொழி பெயர்ப்பாளர் அப்துர்ரஹ்மான் இப்னு ஹாத்திப்(ரலி) அவர்களிடம்), ‘இந்த(க் கர்ப்பிணி)ப் பெண் என்ன சொல்கிறாள்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘இவள் தன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவனைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கிறாள்’ என்றார்கள்.

அபூ ஜம்ரா(ரலி) அவர்கள், ‘நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் அவர்களிடம் தீர்ப்பு கேட்டுவரும்) மக்களுக்கும் இடையே மொழிபெயர்ப்பாளராக இருந்துவந்தேன்’ என்று கூறுகிறார்கள்.

சிலர், ‘ஆட்சியாளர் மற்றும் நீதிபதிக்கு இரண்டு மொழிபெயர்ப்பாளர்கள் தேவை ஒருவர் போதாது)’ என்று கூறுகின்றனர்.

Book :93

(புகாரி: 7195)

بَابُ تَرْجَمَةِ الحُكَّامِ، وَهَلْ يَجُوزُ تَرْجُمَانٌ وَاحِدٌ

وَقَالَ خَارِجَةُ بْنُ زَيْدِ بْنِ ثَابِتٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهُ «أَنْ يَتَعَلَّمَ كِتَابَ اليَهُودِ» حَتَّى كَتَبْتُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُتُبَهُ، وَأَقْرَأْتُهُ كُتُبَهُمْ، إِذَا كَتَبُوا إِلَيْهِ وَقَالَ عُمَرُ وَعِنْدَهُ عَلِيٌّ، وَعَبْدُ الرَّحْمَنِ، وَعُثْمَانُ: «مَاذَا تَقُولُ هَذِهِ؟»، قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ حَاطِبٍ: فَقُلْتُ: تُخْبِرُكَ بِصَاحِبِهَا الَّذِي صَنَعَ بِهَا وَقَالَ أَبُو جَمْرَةَ: كُنْتُ أُتَرْجِمُ بَيْنَ ابْنِ عَبَّاسٍ وَبَيْنَ النَّاسِ ” وَقَالَ بَعْضُ النَّاسِ: لاَ بُدَّ لِلْحَاكِمِ مِنْ مُتَرْجِمَيْنِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.