தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7236

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7 அல்லாஹ் இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழியடைந்திருக்கமாட்டோம் என்று ஒருவர் சொல்வது.

 பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

அகழ்ப்போரின்போது எங்களுடன் நபி(ஸல்) அவர்களும் மண்ணைச் சுமந்து எடுத்துவந்தார்கள். அவர்கள் (சுமந்து வந்த) மண் அவர்களின் வயிற்றின் வெண்மையை மறைத்திருந்ததை பார்த்தேன். அப்போது அவர்கள், ‘(இறைவா!) நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம்.

நாங்கள் தர்மம் செய்யதிருக்கவுமாட்டோம்;

தொழுதிருக்கவுமாட்டோம்.

எனவே, எங்களின் மீது அமைதியை இறக்கியருள்வாயாக!

‘இவர்கள்’ அல்லது ‘(குறைஷித்) தலைவர்கள்’ எங்களின் மீது அக்கிரமம் புரிந்துவிட்டார்கள்.

இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால்

அதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம்’

என்று (இறுதி வரியைக்) குரலை உயர்த்தி (பாடல் நடையில்) கூறினார்கள்.12

Book : 94

(புகாரி: 7236)

بَابُ قَوْلِ الرَّجُلِ لَوْلاَ اللَّهُ مَا اهْتَدَيْنَا

حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْقُلُ مَعَنَا التُّرَابَ يَوْمَ الأَحْزَابِ، وَلَقَدْ رَأَيْتُهُ وَارَى التُّرَابُ بَيَاضَ بَطْنِهِ، يَقُولُ: ” لَوْلاَ أَنْتَ مَا اهْتَدَيْنَا نَحْنُ، وَلاَ تَصَدَّقْنَا وَلاَ صَلَّيْنَا، فَأَنْزِلَنْ سَكِينَةً عَلَيْنَا، إِنَّ الأُلَى – وَرُبَّمَا قَالَ: المَلاَ – قَدْ بَغَوْا عَلَيْنَا، إِذَا أَرَادُوا فِتْنَةً أَبَيْنَا أَبَيْنَا “، يَرْفَعُ بِهَا صَوْتَهُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.