தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7237

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 எதிரியை (போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது விரும்பத் தக்கதன்று.

இது தொடர்பாக நபி (ஸல்) அவர் களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஹதீஸ் அறிவித்துள்ளார்கள்.13

 உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களிடம் எழுத்தராகப் பணிபுரிந்தவரும் அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமையுமான அபுந் நள்ர் சாலிம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களுக்கு அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்கள் கடிதம் எழுதியிருந்தார்கள். நான் அதை (அவர்களுக்கு)ப் படித்துக் காட்டினேன். அதில், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள், எதிரிகளை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போர் அழிவுகளிலிருந்து) பாதுகாப்புக் கோருங்கள். என்றார்கள்’ என்றிருந்தது.14

பகுதி 9

(இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்பதைச் சுட்டும்) ‘லவ்’ எனும் (வியங்கோள் இடைச்) சொல்லைப் பயன்படுத்துவது எந்த அளவிற்குச் செல்லும்?15

அல்லாஹ் கூறினான்: ‘உங்களைத் தடுக்கும் அளவிற்கு எனக்கு பலம் இருந்திருக்குமானால் (தடுத்திருப்பேன்)’ என்று (நபி) லூத் கூறினார். (திருக்குர்ஆன் 11:80)

Book : 94

(புகாரி: 7237)

بَابُ كَرَاهِيَةِ تَمَنِّي لِقَاءِ العَدُوِّ

وَرَوَاهُ الأَعْرَجُ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ وَكَانَ كَاتِبًا لَهُ قَالَ

كَتَبَ إِلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي أَوْفَى فَقَرَأْتُهُ، فَإِذَا فِيهِ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ تَتَمَنَّوْا لِقَاءَ العَدُوِّ، وَسَلُوا اللَّهَ العَافِيَةَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.