பாடம் : 2 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய (வாழ்வும் வாக்குமான) நடைமுறைகளை ஏற்று நடப்பது. அல்லாஹ் கூறுகின்றான்: (இறைவா!) எங்களை இறையச்சமுடையோருக்கு முன்னோடிகளாக ஆக்குவாயாக! ளஎன்று அந்த நல்லடியார்கள் கூறுவார்கள்.ன (25:74) அதாவது நாங்கள் எங்களுக்கு முன் இருந்த(நல்ல)வர்களைப் பின்பற்றியும், எங்களுக்குப் பின்வருவோர் எங்களைப் பின்பற்றியும் நடக்கின்ற சான்றோர்களாக எங்களை ஆக்கிடுவாயாக! இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் மூன்று விஷயங்களை எனக்கும் என் சகோதரர்களுக்கும் விரும்புகின்றேன்: 1. இந்த நபிவழியை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்; அதைப் பற்றி (அறிந்திட) நிறைய கேள்விகள் கேட்க வேண்டும். 2. இந்தக் குர்ஆனை அவர்கள் விளங்கி அதைப் பற்றி (இன்னும் அறிந்திட) மக்களிடம் நிறையக் கேள்விகள் கேட்க வேண்டும். 3. மக்களுக்கு நன்மையே நாட வேண்டும்.
அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
இந்தப் (புனித கஅபா) பள்ளிவாசலில் நான் ஷைபா இப்னு உஸ்மான்(ரஹ்) அவர்களின் அருகில் அமர்ந்தேன். அவர்கள் சொன்னார்கள். உமர்(ரலி) அவர்கள் என்னுடன் நீங்கள் அமர்ந்திருக்கும் இதே இடத்தில் அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர்கள், ‘நான் தங்கம் மற்றும் வெள்ளி எதையும் மக்களிடையே பங்கிடாமல் கஅபாவில்விட்டுவைக்கலாகாது என விரும்பினேன்’ என்று கூறினார்கள். நான், ‘உங்களால் அப்படிச் செய்ய முடியாது’ என்று கூறினேன். அவர்கள், ‘ஏன் முடியாது?’ என்று கேட்டார்கள். நான், ‘உங்கள் தோழாகள் (நபி(ஸல்), அபூ பக்ர்(ரலி) ஆகிய) இருவரும் அப்படிச் செய்யவில்லையே’ என்று சொன்னேன். உமர்(ரலி) அவர்கள், ‘அவ்விருவரும் பின்பற்றப்பட வேண்டியவர்கள்’ என்றார்கள்.
Book : 96
(புகாரி: 7275)بَابُ الِاقْتِدَاءِ بِسُنَنِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا} [الفرقان: 74] ” قَالَ: أَيِمَّةً نَقْتَدِي بِمَنْ قَبْلَنَا، وَيَقْتَدِي بِنَا مَنْ بَعْدَنَا ” وَقَالَ ابْنُ عَوْنٍ: ” ثَلاَثٌ أُحِبُّهُنَّ لِنَفْسِي وَلِإِخْوَانِي: هَذِهِ السُّنَّةُ أَنْ يَتَعَلَّمُوهَا وَيَسْأَلُوا عَنْهَا، وَالقُرْآنُ أَنْ يَتَفَهَّمُوهُ وَيَسْأَلُوا عَنْهُ، وَيَدَعُوا النَّاسَ إِلَّا مِنْ خَيْرٍ
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبَّاسٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ وَاصِلٍ، عَنْ أَبِي وَائِلٍ قَالَ
جَلَسْتُ إِلَى شَيْبَةَ فِي هَذَا المَسْجِدِ، قَالَ: جَلَسَ إِلَيَّ عُمَرُ فِي مَجْلِسِكَ هَذَا، فَقَالَ: «لَقَدْ هَمَمْتُ أَنْ لاَ أَدَعَ فِيهَا صَفْرَاءَ وَلاَ بَيْضَاءَ إِلَّا قَسَمْتُهَا بَيْنَ المُسْلِمِينَ»، قُلْتُ: مَا أَنْتَ بِفَاعِلٍ، قَالَ: «لِمَ؟»، قُلْتُ: لَمْ يَفْعَلْهُ صَاحِبَاكَ، قَالَ: «هُمَا المَرْءَانِ يُقْتَدَى بِهِمَا»
சமீப விமர்சனங்கள்