தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7309

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறாத ஒரு விஷயம் குறித்துக் கேள்வி கேட்கப் பட்டால் எனக்குத் தெரியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்; அல்லது வேத அறிவிப்பு அருளப்பெறும்வரை எந்த பதிலும் அளிக்க மாட்டார்கள். அவர்கள் (ஒரு போதும்) தமது சொந்தக் கருத்தையோ கணிப்பையோ கூறியதில்லை. அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) அல்லாஹ் உங்களுக்கு அறிவித்தவற்றைக் கொண்டு மனிதர் களுக்கிடையே நீங்கள் தீர்ப்பளிப்பதற்காகவே உண்மையான இந்த வேதத்தை உங்களுக்கு நாம் அருளினோம் (4:105). நபி (ஸல்) அவர்களிடம் உயிர்(ரூஹ்) குறித்து கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அது பற்றிய வசனம் அருளப்பெறும் வரை (பதில் சொல்லாமல்) மௌனமாயிருந்தார்கள்.39

 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நான் நோயுற்றிருந்தேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் நடந்தே வந்து என்னை நலம் விசாரித்தார்கள். நான் மூர்ச்சையடைந்து விட்டிருந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்து, பின்னர் தாம் உளூச் செய்து எஞ்சிய தண்ணீரை என் மீது ஊற்றினார்கள். உடனே நான் மூர்ச்சை தெளிந்தேன். பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! நான் என் செல்வம் தொடர்பாக எப்படி முடிவெடுப்பது? என் செல்வத்தை நான் என்ன செய்வது?’ என்று கேட்டேன்.

நபி(ஸல்) அவர்கள், வாரிசுரிமை வசனம் (திருக்குர்ஆன் 04:11) அருளப்பெறும்வரை எந்த பதிலும் அளிக்கவில்லை.40

Book : 96

(புகாரி: 7309)

بَابُ مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسْأَلُ مِمَّا لَمْ يُنْزَلْ عَلَيْهِ الوَحْيُ، فَيَقُولُ: «لاَ أَدْرِي»، أَوْ لَمْ يُجِبْ حَتَّى يُنْزَلَ عَلَيْهِ الوَحْيُ، وَلَمْ يَقُلْ بِرَأْيٍ وَلاَ بِقِيَاسٍ

لِقَوْلِهِ تَعَالَى: {بِمَا أَرَاكَ اللَّهُ} [النساء: 105] وَقَالَ ابْنُ مَسْعُودٍ: سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرُّوحِ فَسَكَتَ حَتَّى نَزَلَتِ الآيَةُ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: سَمِعْتُ ابْنَ المُنْكَدِرِ، يَقُولُ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ

مَرِضْتُ فَجَاءَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي ، وَأَبُو بَكْرٍ، وَهُمَا مَاشِيَانِ فَأَتَانِي وَقَدْ أُغْمِيَ عَلَيَّ، فَتَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ صَبَّ وَضُوءَهُ عَلَيَّ، فَأَفَقْتُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، – وَرُبَّمَا قَالَ سُفْيَانُ فَقُلْتُ: أَيْ رَسُولَ اللَّهِ – كَيْفَ أَقْضِي فِي مَالِي؟ – كَيْفَ أَصْنَعُ فِي مَالِي؟ – قَالَ: فَمَا أَجَابَنِي بِشَيْءٍ حَتَّى نَزَلَتْ: «آيَةُ المِيرَاثِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.