தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7313

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11 …அல்லது உங்களைப் பல்வேறு குழுக்க ளாகப் பிரித்து உங்களில் சிலர் அளிக்கும் துன்பத்தை வேறு சிலர் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன் எனும் (6:65 ஆவது) இறைவசனம்.

 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

‘(நபியே!) கூறுக: உங்களுக்கு மேலிருந்தோ உங்கள் கால்களுக்குக் கீழிருந்தோ ஏதேனுமொரு வேதனையை உங்களின் மீது இறக்கவும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்’ எனும் (திருக்குர்ஆன் 06:65 வது) இறைவசனம் இறைத்தூதர்(ஸல்) அவர்களுககு அருளப்பெற்றபோது ‘உங்களுக்கு மேலிருந்தோ’ என்பதைக் கேட்டவுடன் ‘(இறைவா!) உன் சன்னிதானத்தில் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். ‘உங்கள் கால்களின் கீழிருந்தோ’ என்பதைக் கேட்டவுடன் ‘உன் சன்னிதானத்தில் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்றார்கள். ‘அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து, உங்களில் சிலர் வேறு சிலர் தரும் துன்பத்தைச் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்’ என்பதைக் கேட்டவுடன் ‘(பிரிப்பதும் துன்பத்தைச் சுவைக்கச் செய்வதுமான) இந்த இருவித வேதனைகளும் (முந்தைய வேதனைகளை விட) ‘மிக எளிதானவை’ அல்லது ‘சுலபமானவை’ என்றார்கள்.44

Book : 96

(புகாரி: 7313)

بَابُ فِي قَوْلِ اللَّهِ تَعَالَى: {أَوْ يَلْبِسَكُمْ شِيَعًا} [الأنعام: 65]

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ

لَمَّا نَزَلَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {قُلْ هُوَ القَادِرُ عَلَى أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِنْ فَوْقِكُمْ} [الأنعام: 65]، قَالَ: «أَعُوذُ بِوَجْهِكَ»، {أَوْ مِنْ تَحْتِ أَرْجُلِكُمْ} [الأنعام: 65] قَالَ: «أَعُوذُ بِوَجْهِكَ»، فَلَمَّا نَزَلَتْ: {أَوْ يَلْبِسَكُمْ شِيَعًا وَيُذِيقَ بَعْضَكُمْ بَأْسَ بَعْضٍ} [الأنعام: 65] قَالَ: «هَاتَانِ أَهْوَنُ، – أَوْ أَيْسَرُ -»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.