தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7348

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் இருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெளியே வந்து, ‘யூதர்களை நோக்கிச் செல்லுங்கள்’ என்று கூறினார்கள். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (யூதர்களின் வேத பாடசாலையான) ‘பைத்துல் மித்ராஸ்’ எனும் இடத்திற்குச் சென்றோம். அங்கு நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு ‘யூதர்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்; (ஈருலம்லும்) சாந்தி அடைவீர்கள்’ என்று அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். அதற்கு யூதர்கள், ‘நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டீர்கள், அபுல் காசிமே!’ என்று பதிலளித்தார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இ(ந்த ஒப்புதல் வாக்குமூலத்)தைத் தான் நான் எதிர்பார்க்கிறேன்; இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்; சாந்தி பெறுவீர்கள்’ என்றார்கள். அப்போதும் யூதர்கள் ‘நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டீர்கள், அபுல் காசிமே!’ என்றார்கள். உடனே அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இதைத்தான் எதிர்பார்க்கிறேன்’ என்று கூறிவிட்டுப் பிறகு மூன்றாம் முறையாக (முன்பு போன்றே) சொன்னார்கள். பின்னர், ‘பூமி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது. நான் உங்களை இந்த பூமியிலிருந்து நாடு கடத்திட விரும்புகிறேன். உங்களில் தம் (விலையைப்) பெறுகிறவர் அச்சொத்தை விற்றுவிடட்டும். இல்லையென்றால், பூமி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்’ என்றார்கள்.77

Book :96

(புகாரி: 7348)

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ

بَيْنَا نَحْنُ فِي المَسْجِدِ، خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «انْطَلِقُوا إِلَى يَهُودَ»، فَخَرَجْنَا مَعَهُ حَتَّى جِئْنَا بَيْتَ المِدْرَاسِ، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَادَاهُمْ فَقَالَ: «يَا مَعْشَرَ يَهُودَ، أَسْلِمُوا تَسْلَمُوا»، فَقَالُوا: قَدْ بَلَّغْتَ يَا أَبَا القَاسِمِ، قَالَ: فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ذَلِكَ أُرِيدُ، أَسْلِمُوا تَسْلَمُوا»، فَقَالُوا: قَدْ بَلَّغْتَ يَا أَبَا القَاسِمِ، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ذَلِكَ أُرِيدُ»، ثُمَّ قَالَهَا الثَّالِثَةَ، فَقَالَ: «اعْلَمُوا أَنَّمَا الأَرْضُ لِلَّهِ وَرَسُولِهِ، وَأَنِّي أُرِيدُ أَنْ أُجْلِيَكُمْ مِنْ هَذِهِ الأَرْضِ، فَمَنْ وَجَدَ مِنْكُمْ بِمَالِهِ شَيْئًا فَلْيَبِعْهُ، وَإِلَّا فَاعْلَمُوا أَنَّمَا الأَرْضُ لِلَّهِ وَرَسُولِهِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.