பாடம் : 20 அதிகாரியோ ஆட்சியாளரோ சட்ட முடிவெடுக்கும் போது அறியாமையால் தவறிழைத்துவிட்டால் அவரது தீர்ப்பு ரத்துச் செய்யப்படும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நமது (மார்க்கத்தின்) முடிவுப்படி அமையாத ஒரு செயலை ஒருவர் செய்தால் அது நிராகரிக்கப்படும்.80
7350. & 7351. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பனூ அதீ அல்அன்சாரி குலத்தைச் சேர்ந்த ஒருவரை கைபர் பகுதியின் அதிகாரியாக அனுப்பிவைத்தார்கள். அவர் சென்று (வரும்போது) உயர் ரகப் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘கைபரின் பேரீச்சம் பழங்கள் எல்லாமே இப்படித்தான் (உயர் ரகமானதாக) இருக்குமா?’ என்று கேட்டார்கள். அவர், ‘இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! நாங்கள் மட்டரகப் பேரீச்சம் பழங்களில் இரண்டு ‘ஸாஉ’கள் கொடுத்து ஒரு ஸாஉ (இந்த உயர் ரகப் பேரீச்சம் பழம்) வாங்குவோம்’ என்றார். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இவ்வாறு செய்யாதீர்கள். சரிக்குச் சமமாகவே தவிர (வாங்காதீர்கள்). அல்லது மட்டமான பேரீச்சம் பழங்களை விற்றுவிட்டு, அதன் தொகைக்கு உயர் ரகப் பேரீச்சம் பழங்களை வாங்குங்கள். இவ்வாறுதான் நிறுக்கப்படும் பொருட்களின் சட்டமும்’ என்றார்கள்.81
Book : 96
(புகாரி: 7350 & 7351)بَابُ إِذَا اجْتَهَدَ العَامِلُ أَوِ الحَاكِمُ، فَأَخْطَأَ خِلاَفَ الرَّسُولِ مِنْ غَيْرِ عِلْمٍ، فَحُكْمُهُ مَرْدُودٌ
لِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ»
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَخِيهِ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، عَنْ عَبْدِ المَجِيدِ بْنِ سُهَيْلِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّهُ سَمِعَ سَعِيدَ بْنَ المُسَيِّبِ، يُحَدِّثُ أَنَّ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ، وَأَبَا هُرَيْرَةَ، حَدَّثَاهُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بَعَثَ أَخَا بَنِي عَدِيٍّ الأَنْصَارِيَّ، وَاسْتَعْمَلَهُ عَلَى خَيْبَرَ، فَقَدِمَ بِتَمْرٍ جَنِيبٍ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَكُلُّ تَمْرِ خَيْبَرَ هَكَذَا؟»، قَالَ: لاَ، وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ، إِنَّا لَنَشْتَرِي الصَّاعَ بِالصَّاعَيْنِ مِنَ الجَمْعِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَفْعَلُوا، وَلَكِنْ مِثْلًا بِمِثْلٍ، أَوْ بِيعُوا هَذَا وَاشْتَرُوا بِثَمَنِهِ مِنْ هَذَا، وَكَذَلِكَ المِيزَانُ»
சமீப விமர்சனங்கள்