தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7353

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22 நபி (ஸல்) அவர்களுடைய சட்டங்கள் (நபித்தோழர்கள்) அனைவருக்கும் தெரிந்திருந்தன என்று கருதுவோருக்கு எதிரான ஆதாரமும், நபித்தோழர்களில் சிலர் நபியவர்களின் அவைக்கு வராமலும் இஸ்லாமிய விஷயங்களை அறியாமலும் இருந்துள்ளனர் என்பதற்கான ஆதாரமும்.83

 உபைத் இப்னு உமைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

(ஒரு முறை) அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அவர்கள் உமர்(ரலி) (அவர்கள் ஆட்சித் தலைவராக இருந்தபோது) அவர்களைச் சந்திக்க அனுமதி கேட்டார்கள். உமர் ஏதோ வேலையாக இருப்பதாகத் தோன்றவே அபூ மூஸா திரும்பிச் சென்றார்கள். பின்னர் உமர்(ரலி) அவர்கள், ‘நான் அப்துல்லாஹ் இப்னு கைஸ் (அபூ மூஸா (ரலி) அவர்களின் குரலைக் கேட்கவில்லையா? அவருக்கு அனுமதி அளியுங்கள்’ என்றார்கள். உடனே அவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். உமர்(ரலி) அவர்கள், ‘நீங்கள் இப்படிச் செய்ததற்கு (-வராமலிருந்ததற்குக்) காரணம் என்ன?’ என்று (அவர்களிடம்) கேட்க, அபூ மூஸா(ரலி) அவர்கள், ‘(மூன்று முறை சலாம் சொல்லியும் சந்திக்க அனுமதி கிடைக்காவிட்டால்) திரும்பிச் சென்றுவிடும்படி தான் நமக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது’ என்றார்கள். உமர்(ரலி) அவர்கள், ‘இதற்கு ஒரு சான்றை நீங்கள் என்னிடம் கொண்டு வாருங்கள்; இல்லையேல் உங்களின் மீது நான் நடவடிக்கை எடுப்பேன்’ என்றார்கள். உடனே அபூ மூஸா(ரலி) அவர்கள் (நபியின் இந்தக் கட்டளைக்கு வேறு சாட்சி எவரும் இருக்கிறாரா? என்று அறிவதற்காக) அன்சாரிகளின் ஓர் அவைக்குச் சென்றார்கள். அங்கிருந்தவர்கள், ‘எங்களில் (வயதில்) சிறியவர்தாம் இதற்கு சாட்சியமளிப்பார்’ என்றனர். அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் எழுந்துவந்து, ‘(ஆம்) நமக்கு இப்படித்தான் கட்டளையிடப்பட்டுள்ளது’ என்றார்கள். அதைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள், ‘நபி(ஸல்) அவர்களின் கட்டளைகளில் இது எனக்குத் தெரியாமல் போய்விட்டதே! கடைவீதிகளில் வியாபாரம் செய்துவந்தது என் கவனத்தைத் திசை திருப்பிவிட்டுள்ளது’ என்றார்கள்.84

Book : 96

(புகாரி: 7353)

بَابُ الحُجَّةِ عَلَى مَنْ قَالَ: إِنَّ أَحْكَامَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتْ ظَاهِرَةً، وَمَا كَانَ يَغِيبُ بَعْضُهُمْ مِنْ مَشَاهِدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأُمُورِ الإِسْلاَمِ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، حَدَّثَنِي عَطَاءٌ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، قَالَ

اسْتَأْذَنَ أَبُو مُوسَى عَلَى عُمَرَ فَكَأَنَّهُ وَجَدَهُ مَشْغُولًا فَرَجَعَ، فَقَالَ عُمَرُ: أَلَمْ أَسْمَعْ صَوْتَ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ، ائْذَنُوا لَهُ، فَدُعِيَ لَهُ، فَقَالَ: مَا حَمَلَكَ عَلَى مَا صَنَعْتَ؟ فَقَالَ: «إِنَّا كُنَّا نُؤْمَرُ بِهَذَا»، قَالَ: فَأْتِنِي عَلَى هَذَا بِبَيِّنَةٍ أَوْ لَأَفْعَلَنَّ بِكَ، فَانْطَلَقَ إِلَى مَجْلِسٍ مِنَ الأَنْصَارِ، فَقَالُوا: لاَ يَشْهَدُ إِلَّا أَصَاغِرُنَا، فَقَامَ أَبُو سَعِيدٍ الخُدْرِيُّ فَقَالَ: «قَدْ كُنَّا نُؤْمَرُ بِهَذَا»، فَقَالَ عُمَرُ خَفِيَ عَلَيَّ هَذَا مِنْ أَمْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَلْهَانِي الصَّفْقُ بِالأَسْوَاقِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.