பாடம்: 23
நபி (ஸல்) அவர்கள் (ஒன்றை) எதிர்க்காமல் இருந்தது (அது அங்கீகரிக்கப்பட்டது தான் என்பதற்கு) ஆதாரமாகும்; நபியவர்கள் அல்லாத மற்றவர்களுக்கு இது பொருந்தாது.
முஹம்மத் இப்னு அல்முன்கதிர் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் ‘இப்னுஸ் ஸய்யாத் தான் தஜ்ஜால்’ என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வதை பார்த்தேன். அப்போது நான், (ஜாபிர் (ரலி) அவர்களிடம்), ‘அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறீர்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து இதைக் கூறியதை கேட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதை மறுக்கவில்லை’ என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம்: 96
(புகாரி: 7355)بَابُ مَنْ رَأَى تَرْكَ النَّكِيرِ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حُجَّةً، لاَ مِنْ غَيْرِ الرَّسُولِ
حَدَّثَنَا حَمَّادُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، قَالَ
رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَحْلِفُ بِاللَّهِ: أَنَّ ابْنَ الصَّائِدِ الدَّجَّالُ، قُلْتُ: تَحْلِفُ بِاللَّهِ؟ قَالَ: «إِنِّي سَمِعْتُ عُمَرَ يَحْلِفُ عَلَى ذَلِكَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يُنْكِرْهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
Bukhari-Tamil-7355.
Bukhari-TamilMisc-7355.
Bukhari-Shamila-7355.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-6832.
சமீப விமர்சனங்கள்