பாடம் : 4 அல்லாஹ் மறைவானவற்றை அறிபவன்; (தான் அறிந்துள்ள) மறைவான விஷயங் களை அவன் எவருக்கும் வெளிப்படுத்த மாட்டான் எனும் (72:26ஆவது) இறை வசனம். நிச்சயமாக மறுமை(நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது (31:34). இ(ந்த வேதத்)தை தான் அறிந்துள்ளதற் கேற்பவே அல்லாஹ் அருளினான். (4:166) அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கருத்தரிப்பதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. (35:11) மறுமை நாள் பற்றிய அறிவு அவனிடமே விடப்பட்டுள்ளது. (41:47) யஹ்யா பின் ஸியாத் அல்ஃபர்ராஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றான) அழ்ழாஹிர்’ (வெளிப்படையானவன்) என்பதற்கு தனது அறிவால் ஒவ்வொரு பொருளையும் வெளிப்படையாக அறிபவன்’ என்று பொருள். (மற்றொரு பெயரான) அல்பாத்தின்’ (அந்தரங்கமானவன்) என்பதற்கு தனது அறிவால் ஒவ்வொரு பொருளையும் அகமியமாக அறிபவன்’ என்று பொருள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். (பெண்களின்) கருவறைகளில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். நாளை என்ன நடக்கும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் (உறுதியாக) அறியமாட்டார்கள். எந்த உயிரும் தான் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது; அல்லாஹ் தான் அதை அறிவான். மறுமைநாள் எப்போது வரும் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் தெரியாது.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.10
Book : 97
(புகாரி: 7379)بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {عَالِمُ الغَيْبِ فَلاَ يُظْهِرُ عَلَى غَيْبِهِ أَحَدًا} [الجن: 26]، وَ {إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ [ص:116] السَّاعَةِ} [لقمان: 34]، وَ {أَنْزَلَهُ بِعِلْمِهِ} [النساء: 166]، {وَمَا تَحْمِلُ مِنْ أُنْثَى وَلاَ تَضَعُ إِلَّا بِعِلْمِهِ} [فاطر: 11]، {إِلَيْهِ يُرَدُّ عِلْمُ السَّاعَةِ} [فصلت: 47]
قَالَ يَحْيَى: {الظَّاهِرُ} [الحديد: 3]: «عَلَى كُلِّ شَيْءٍ عِلْمًا»، {وَالبَاطِنُ} [الحديد: 3]: «عَلَى كُلِّ شَيْءٍ عِلْمًا»
حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
مَفَاتِيحُ الغَيْبِ خَمْسٌ، لاَ يَعْلَمُهَا إِلَّا اللَّهُ: لاَ يَعْلَمُ مَا تَغِيضُ الأَرْحَامُ إِلَّا اللَّهُ، وَلاَ يَعْلَمُ مَا فِي غَدٍ إِلَّا اللَّهُ، وَلاَ يَعْلَمُ مَتَى يَأْتِي المَطَرُ أَحَدٌ إِلَّا اللَّهُ، وَلاَ تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِلَّا اللَّهُ، وَلاَ يَعْلَمُ مَتَى تَقُومُ السَّاعَةُ إِلَّا اللَّهُ
சமீப விமர்சனங்கள்