பாடம் : 7 அல்லாஹ் கூறுகின்றான்: அவன் கண்ணியமிக்கவன்; ஞானமிக்கவன் (29:42). கண்ணியத்தின் அதிபதியான உங்கள் இறைவன் அவர்கள் கூறும் (தரக் குறைவான) பண்புகளை விட்டு மிகவும் தூயவன் (37:180). கண்ணியம் என்பது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறைநம்பிக்கை யாளர்களுக்குமே உரியது (63:8). அல்லாஹ்வின் கண்ணியம் மற்றும் அவனுடைய பண்புகள் பெயரால் சத்தியம் செய்வது (செல்லும்). நபி (ஸல்) அவர்கள், (மறுமை நாளில்) நரகம், போதும்! போதும்! உன் கண்ணியத் தின் மீதாணையாக! என்று சொல்லும் எனக் கூறினார்கள். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.15 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமையில் நரகத்திலிருந்து இறை நம்பிக்கை உள்ள அனைவரும் வெளியேற்றப் பட்ட பிறகு) சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே ஒருவர் மட்டும் (நரகத்தை முன்னோக்கியவராக) எஞ்சியிருப்பார். அவர்தாம் நரகவாசிகளிலேயே இறுதியாக சொர்க்கம் செல்பவராவார். அவர், என் இறைவா! என் முகத்தை நரகத்தைவிட்டு வேறு பக்கம் திருப்பிவிடுவாயாக! உன் கண்ணியத்தின் மீதாணையாக! நான் உன்னிடம் வேறெதையும் கேட்கமாட்டேன் என்று சொல்வார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: வ-மையும் கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், உனக்கு இதுவும் இதைப் போன்று பத்து மடங்கும் கிடைக்கும் என்று கூறுவான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்.17 (இறைத்தூதர்) அய்யூப் (அலை) அவர்கள் (இறைவா!) உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக! உனது அருள்வளத்தை விட்டு நான் தேவையற்றவன் அல்லன் என்று சொன்னார்கள்.18
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்துவந்தார்கள்: (இறைவா!) உன் கண்ணியத்தின் பெயரால் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஜின் இனத்தாரும் மனித குலத்தாரும் இறந்துவிடுவார்கள்; (ஆனால்,) நீ இறக்கமாட்டாய்.
Book : 97
(புகாரி: 7383)بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَهُوَ العَزِيزُ الحَكِيمُ} [إبراهيم: 4]، {سُبْحَانَ رَبِّكَ رَبِّ العِزَّةِ عَمَّا يَصِفُونَ} [الصافات: 180]، {وَلِلَّهِ العِزَّةُ وَلِرَسُولِهِ} [المنافقون: 8]، وَمَنْ حَلَفَ بِعِزَّةِ اللَّهِ وَصِفَاتِهِ
وَقَالَ أَنَسٌ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” تَقُولُ جَهَنَّمُ: قَطْ قَطْ وَعِزَّتِكَ ” وَقَالَ أَبُو هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” يَبْقَى رَجُلٌ بَيْنَ الجَنَّةِ وَالنَّارِ، آخِرُ أَهْلِ النَّارِ دُخُولًا الجَنَّةَ، فَيَقُولُ: يَا رَبِّ اصْرِفْ وَجْهِي عَنِ النَّارِ، لاَ وَعِزَّتِكَ لاَ أَسْأَلُكَ غَيْرَهَا ” قَالَ أَبُو سَعِيدٍ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: لَكَ ذَلِكَ وَعَشَرَةُ أَمْثَالِهِ ” وَقَالَ أَيُّوبُ: «وَعِزَّتِكَ لاَ غِنَى بِي عَنْ بَرَكَتِكَ»
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، حَدَّثَنَا حُسَيْنٌ المُعَلِّمُ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنِ ابْنِ عَبَّاسٍ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَقُولُ: «أَعُوذُ بِعِزَّتِكَ، الَّذِي لاَ إِلَهَ إِلَّا أَنْتَ الَّذِي لاَ يَمُوتُ، وَالجِنُّ وَالإِنْسُ يَمُوتُونَ»
சமீப விமர்சனங்கள்