தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7402

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14 அல்லாஹ்வின் உள்ளமை, அவனுடைய பண்புகள் மற்றும் பெயர்கள் தொடர்பாகக் கூறப்பட்டுள்ளவை.37 குபைப் (ரலி) அவர்கள், என்னுடைய இந்த உயிர்த் தியாகம் அல்லாஹ்வின் உள்ளமைக்காகத்தான் என்று கூறி, அல்லாஹ் வின் பெயரால் உள்ளமையைக் குறிப்பிட் டார்கள்.38

 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பத்துப்பே(ர் கொண்ட உளவுப்படையின)ரை (ஓரிடத்திற்கு) அனுப்பிவைத்தார்கள். அவர்களில் அன்சாரியான குபைப்(ரலி) அவர்களும் இருந்தார்கள். (உளவுப்படையினரின் வருகையை அறிந்து ஹுதைல் எனும் கூட்டத்தார் பின்தொடர்ந்து வந்து சிலரைக் கொன்றுவிட்டு, சிலரை சிறைபிடித்தார்கள். குபைப் மக்காவில் பனுல் ஹாரிஸ் எனும் கூட்டத்தாரிடம் விற்கப்பட்டார்.) அவர்கள் குபைப்(ரலி) அவர்களைக் கொலை செய்வதற்காக ஒன்று திரண்டபோது குபைப்(ரலி) அவர்கள் தங்களின் மறைவிடத்து முடிகளை மழித்துக் கொள்வதற்காக ஹாரிஸின் மகளிடம் சவரக்கத்தி ஒன்றை இரவல் வாங்கினார்கள். அவர்கள் அவரைக் கொல்வதற்காக (மக்காவின்) புனித எல்லைக்கு வெளியே சென்றபோது குபைப்(ரலி) அவர்கள், ‘நான் முஸ்லிமாகக் கொல்லப்படும் இந்த வேளையில் எதைப் பற்றியும் நான் பொருட்படுத்துவதாக இல்லை. நான் எந்தப் பகுதியில் கொல்லப்பட்டாலும் அது அல்லாஹ்வுக்காகத்தான் (என்பதை எண்ணிப் பெருமிதம் அடைகிறேன்). நான் கொல்லப்படுவது எல்லாம் அல்லாஹ்வின் உள்ளமைக்காகத்தான். அவன் நினைத்தால் துண்டிக்கப்பட்ட என் உறுப்புகளின் இணைப்புகளின் மீது அருள்வளத்தைப் பொழிவான்’ என்று பாடினார்கள். பின்னர், ஹாரிஸின் மகன், குபைப்(ரலி) அவர்களைக் கொன்றுவிட்டான். குபைப்(ரலி) அவர்கள் மற்றும் அவர்களின் தோழர்களின் செய்தியை அவர்கள் கொல்லப்பட்ட அன்றே நபி(ஸல்) அவர்கள் (இறை அறிவிப்பின் வாயிலாக அறிந்து) தம் தோழர்களுக்குத் தெரிவித்தார்கள்.39

Book : 97

(புகாரி: 7402)

بَابُ مَا يُذْكَرُ فِي الذَّاتِ وَالنُّعُوتِ وَأَسَامِي اللَّهِ

وَقَالَ خُبَيْبٌ: «وَذَلِكَ فِي ذَاتِ الإِلَهِ فَذَكَرَ الذَّاتَ بِاسْمِهِ تَعَالَى»

حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ أَبِي سُفْيَانَ بْنِ أَسِيدِ بْنِ جَارِيَةَ الثَّقَفِيُّ، حَلِيفٌ لِبَنِي زُهْرَةَ وَكَانَ مِنْ أَصْحَابِ أَبِي هُرَيْرَةَ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ

«بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشَرَةً»، مِنْهُمْ خُبَيْبٌ الأَنْصَارِيُّ، فَأَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عِيَاضٍ، أَنَّ ابْنَةَ الحَارِثِ، أَخْبَرَتْهُ، أَنَّهُمْ حِينَ اجْتَمَعُوا اسْتَعَارَ مِنْهَا مُوسَى يَسْتَحِدُّ بِهَا، فَلَمَّا خَرَجُوا مِنَ الحَرَمِ لِيَقْتُلُوهُ، قَالَ خُبَيْبٌ الأَنْصَارِيُّ:
[البحر الطويل]
وَلَسْتُ أُبَالِي حِينَ أُقْتَلُ مُسْلِمًا … عَلَى أَيِّ شِقٍّ كَانَ لِلَّهِ مَصْرَعِي،
وَذَلِكَ فِي ذَاتِ الإِلَهِ وَإِنْ يَشَأْ … يُبَارِكْ عَلَى أَوْصَالِ شِلْوٍ مُمَزَّعِ،
فَقَتَلَهُ ابْنُ الحَارِثِ، «فَأَخْبَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصْحَابَهُ خَبَرَهُمْ يَوْمَ أُصِيبُوا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.