தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7438

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அதாஉ இப்னு யஸீத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் மேற்கண்ட ஹதீஸை அறிவித்தபோது அவர்களுடன் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் இருந்தார்கள். அன்னார் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்த இந்த ஹதீஸிற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இறுதியில் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள், ‘இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் கூறுவான்: என அறிவித்தபோது தான் அபூ ஸயீத்(ரலி) அவர்கள் (குறுக்கிட்டு,) ‘இதுவும் இதைப் போன்று பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும்’ என்றல்லவா ஹதீஸ் இருக்கிறது அபூ ஹுரைராவே!’ என்று கேட்டார்கள். அபூ ஹுரைரா(ரலி) அவர்கள், ‘நான் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து ‘உனக்கு இதுவும் இதைப் போன்ற இன்னொரு மடங்கும் கிடைக்கும்’ என்று கூறினார்கள் எனவே மனனம் செய்துள்ளேன்’ என்றார்கள். அதற்கு அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள், ‘நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து ‘இதுவும் இதைப் போன்று பத்து மடங்குகளும் உனக்குக் கிடைக்கும்’ என்ற சொல்லையே மனனம் செய்துள்ளேன் என உறுதி கூறுகிறேன்’ என்றார்கள். அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் ‘அந்த மனிதர் தாம் சொர்க்கத்தில் இறுதியாக நுழையும் மனிதராவார்’ என்றார்கள்.77

Book :97

(புகாரி: 7438)

قَالَ عَطَاءُ بْنُ يَزِيدَ، وَأَبُو سَعِيدٍ الخُدْرِيُّ، مَعَ أَبِي هُرَيْرَةَ لاَ يَرُدُّ عَلَيْهِ مِنْ حَدِيثِهِ شَيْئًا حَتَّى إِذَا حَدَّثَ أَبُو هُرَيْرَةَ أَنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى قَالَ: «ذَلِكَ لَكَ وَمِثْلُهُ مَعَهُ»، قَالَ أَبُو سَعِيدٍ الخُدْرِيُّ: «وَعَشَرَةُ أَمْثَالِهِ مَعَهُ»، يَا أَبَا هُرَيْرَةَ، قَالَ أَبُو هُرَيْرَةَ مَا حَفِظْتُ إِلَّا قَوْلَهُ: «ذَلِكَ لَكَ وَمِثْلُهُ مَعَهُ»، قَالَ أَبُو سَعِيدٍ الخُدْرِيُّ أَشْهَدُ أَنِّي حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَوْلَهُ: «ذَلِكَ لَكَ وَعَشَرَةُ أَمْثَالِهِ» قَالَ أَبُو هُرَيْرَةَ فَذَلِكَ: الرَّجُلُ آخِرُ أَهْلِ الجَنَّةِ دُخُولًا الجَنَّةَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.