பாடம்: 91
தொழும் போது இமாமை நோக்கிப் பார்வையை உயர்த்தலாமா?
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சூரிய) கிரகணத் தொழுகையை தொழுவித்த போது, நான் பின்னே செல்வது போன்று என்னை நீங்கள் கண்ட போது நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியை அழித்துக் கொண்டிருந்ததை நான் கண்டேன் என்று கூறினார்கள்.
(குறிப்பு: விரிவாக விவரம் அறியக் காண்க: பாகம்-2, ஹதீஸ்-1213)
அபு மஃமர் கூறினார்:
‘நபி(ஸல்) அவர்கள் லுஹரிலும் அஸரிலும் (எதையேனும்) ஓதுவார்களா?’ என்று கப்பாப்(ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர் ‘ஆம்’ என்றார். ‘நீங்கள் அதை எப்படி அறிந்து கொண்டீர்கள்?’ என்று நாங்கள் கேட்டோம். ‘நபி(ஸல்) அவர்களின் தாடி அசைவதிலிருந்து இதை அறிந்து கொள்வோம்’ என்று கப்பாப்(ரலி) பதிலளித்தார்.
அத்தியாயம்: 10
(புகாரி: 746)بَابُ رَفْعِ البَصَرِ إِلَى الإِمَامِ فِي الصَّلاَةِ
وَقَالَتْ عَائِشَةُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلاَةِ الكُسُوفِ: «فَرَأَيْتُ جَهَنَّمَ يَحْطِمُ بَعْضُهَا بَعْضًا حِينَ رَأَيْتُمُونِي تَأَخَّرْتُ»
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، قَالَ
قُلْنَا لِخَبَّابٍ أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالعَصْرِ؟، قَالَ: نَعَمْ، قُلْنَا: بِمَ كُنْتُمْ تَعْرِفُونَ ذَاكَ؟ قَالَ: «بِاضْطِرَابِ لِحْيَتِهِ»
Bukhari-Tamil-746.
Bukhari-TamilMisc-746.
Bukhari-Shamila-746.
Bukhari-Alamiah-704.
Bukhari-JawamiulKalim-707.
சமீப விமர்சனங்கள்