தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7462

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுடன் மதீனாவில் உள்ள ஒரு வேளாண் பூமியில் பேரீச்சந் தோட்டத்தில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது யூதர்கள் சிலரை நாங்கள் கடந்து சென்றோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றை ஊன்றியபடி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது யூதர்களில் ஒருவர் மற்றொருவரிடம் ‘அவரிடம் உயிர் (ரூஹ்) பற்றிக் கேளுங்கள்’ என்றார். அதற்கு மற்றவர் ‘அவரிடம் கேட்காதீர்கள். இது தொடர்பாக நீங்கள் விரும்பாத பதிலை அவர் தந்து விடக் கூடும்’ என்று சொல்ல, மற்றவர்கள் ‘நாம் அவரிடம் நிச்சயம் கேட்போம்’ என்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் எழுந்து வந்து) ‘அபுல் காசிமே! உயிர் (ரூஹ்) என்பதென்ன?’ என்று கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் (அவருக்க பதில் எதுவும் சொல்லாமல்) மெளனமாக இருந்தார்கள். நான் நபி(ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்பெறுகின்றது என்று அறிந்து கொண்டேன். ‘(நபியே!) உங்களிடம் அவர்கள் உயிர் பற்றிக் கேட்கிறார்கள். உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது. அவர்களுக்குச் சிறிதளவு ஞானமே வழங்கப்பட்டுள்ளது’ எனும் (திருக்குர்ஆன் 17:85 வது) இறைவசனத்தை எடுத்துரைத்தார்கள்.102

அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ்(ரஹ்) கூறினார்: (‘உங்களுக்கு’ சிறிதளவு ஞானமே வழங்கப்பட்டுள்ளது என்பதற்கு பதிலாக) ‘அவர்களுக்கு’ என்றே எங்களின் ஓதலில் உள்ளது.

Book :97

(புகாரி: 7462)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، عَنْ عَبْدِ الوَاحِدِ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ

بَيْنَا أَنَا أَمْشِي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ حَرْثِ المَدِينَةِ وَهُوَ يَتَوَكَّأُ عَلَى عَسِيبٍ مَعَهُ، فَمَرَرْنَا عَلَى نَفَرٍ مِنَ اليَهُودِ، فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ: سَلُوهُ عَنِ الرُّوحِ، فَقَالَ بَعْضُهُمْ: لاَ تَسْأَلُوهُ أَنْ يَجِيءَ فِيهِ بِشَيْءٍ تَكْرَهُونَهُ، فَقَالَ بَعْضُهُمْ: لَنَسْأَلَنَّهُ، فَقَامَ إِلَيْهِ رَجُلٌ مِنْهُمْ فَقَالَ: يَا أَبَا القَاسِمِ ، مَا الرُّوحُ؟ «فَسَكَتَ عَنْهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلِمْتُ أَنَّهُ يُوحَى إِلَيْهِ»، فَقَالَ: (وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتُوا مِنَ العِلْمِ إِلَّا قَلِيلًا)، قَالَ الأَعْمَشُ هَكَذَا فِي قِرَاءَتِنَا





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.