பாடம் : 30 (நபியே!) கூறுக: என் இறைவனின் வாக்குகளை எழுதுவதற்குக் கடலே மையாக ஆனாலும் என் இறைவனின் வாக்குகள் வற்றுவதற்கு முன்னால் கடல் வற்றிப்போய்விடும்; மேலதிகமாக அதைப் போன்ற (கடல்) ஒன்றை நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரியே எனும் (18:109ஆவது) இறைவசனம். மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: இப்பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுதுகோல்களானாலும் கடல் முழுவதும் மையானாலும் அதற்கு மேல் இன்னும் ஏழு கடல்கள் இருந்தாலும்கூட அல்லாஹ்வின் வாக்குகள் (எழுதித்) தீர்ந்து போக மாட்டா. திண்ணமாக, அல்லாஹ் வல்லமைமிக்க வனும் நுண்ணறிவாளனும் ஆவான். (31:27) உங்கள் இறைவனாகிய அல்லாஹ் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பிறகு,அரியாசனத்தில் (ஆட்சியில்) அமர்ந்தான். அவன் இரவைக் கொண்டு பகலை மூடுகின்றான். மேலும்,அவ்விரவு பகலை விரைவாகப் பின் தொடர்கிறது. அவனே சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் ஆகியவற்றையும் படைத்தான். அவையனைத்தும் அவனுடைய கட்டளைக்குக் கட்டுப்படுகின்றன. படைக்கும் ஆற்றலும் கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்குரியவையே. அனைத்துலகங்களுக்கும் அதிபதியாகிய அல்லாஹ் வளம் மிக்கவன் ஆவான். (7:54)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
இறைவழியில் போராடுவதற்காகவும் அவனுடைய வாக்குகளை உண்மையென நிரூபிப்பதற்காகவும் மட்டுமே தம் வீட்டைவிட்டுப் புறப்பட்டு, அவனுடைய பாதையில் போராடியவரை சொர்க்கத்தில் அனுப்புவதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளான்; அல்லது அவர் அடைந்து கொண்ட நன்மையுடன் அல்லது (அந்த நன்மையுடன் சேர்த்து) போரில் கிடைத்த செல்வத்துடன் அவரை வீட்டிற்குத் திரும்பக் கொண்டுவர அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.103
Book : 97
(புகாரி: 7463)بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {قُلْ لَوْ كَانَ البَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ البَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا} [الكهف: 109]
{وَلَوْ أَنَّ مَا فِي الأَرْضِ مِنْ شَجَرَةٍ أَقْلاَمٌ وَالبَحْرُ يَمُدُّهُ مِنْ بَعْدِهِ سَبْعَةُ أَبْحُرٍ مَا نَفِدَتْ كَلِمَاتُ اللَّهِ}، {إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى العَرْشِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُ حَثِيثًا وَالشَّمْسَ وَالقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ أَلاَ لَهُ الخَلْقُ وَالأَمْرُ تَبَارَكَ اللَّهُ رَبُّ العَالَمِينَ} ” {سَخَّرَ} [التوبة: 79]: «ذَلَّلَ»
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«تَكَفَّلَ اللَّهُ لِمَنْ جَاهَدَ فِي سَبِيلِهِ، لاَ يُخْرِجُهُ مِنْ بَيْتِهِ إِلَّا الجِهَادُ فِي سَبِيلِهِ وَتَصْدِيقُ كَلِمَتِهِ، أَنْ يُدْخِلَهُ الجَنَّةَ، أَوْ يَرُدَّهُ إِلَى مَسْكَنِهِ بِمَا نَالَ مِنْ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ»
சமீப விமர்சனங்கள்