தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7519

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 நபி (ஸல்) அவர்கள், தம்மிடம் கிராமவாசி ஒருவர் இருக்க, ஒரு நாள் (பின்வருமாறு) அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.

சொர்க்கவாசிகளில் ஒருவர் தம் இறைவனிடம் பயிர், செய்ய அனுமதி கேட்பார். இறைவன், ‘(இங்கு) நீ விரும்பிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா?’ என்று கேட்பான். அதற்கு அவர், ‘ஆம். எனினும், நான் பயிர் செய்ய விரும்புகிறேன்’ என்று பதிலளிப்பார். உடனே அவர் விரைந்து சென்று விதைகளைத் தூவிவிடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அது முளைத்து பயிராகி கதிர் முற்றி அறுவடை செய்யப்பட்டு மலை போன்று களத்தில் குவிக்கப்பட்டுவிடும். அப்போது அல்லாஹ், ‘ஆதமின் மகனே! எடுத்துக்கொள். ஏனென்றால், எதனாலும் உன் வயிற்றை நிரப்ப முடியாது’ என்று சொல்வான்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த கிராமவாசி உடனே ‘இறைத்தூதர் அவர்களே! இந்த மனிதர் குறைஷியராகவோ அன்சாரியாகவோ தாம் இருப்பார். ஏனெனில், அவர்கள் தாம் விவசாயிகள். நாங்களோ விவசாயிகள் அல்லர்’ என்றார். இதைக் கேட்டு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.161

Book :97

(புகாரி: 7519)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا فُلَيْحٌ، حَدَّثَنَا هِلاَلٌ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَوْمًا يُحَدِّثُ وَعِنْدَهُ رَجُلٌ مِنْ أَهْلِ البَادِيَةِ: ” أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الجَنَّةِ اسْتَأْذَنَ رَبَّهُ فِي الزَّرْعِ، فَقَالَ لَهُ: أَوَلَسْتَ فِيمَا شِئْتَ؟ قَالَ: بَلَى، وَلَكِنِّي أُحِبُّ أَنْ أَزْرَعَ، فَأَسْرَعَ وَبَذَرَ، فَتَبَادَرَ الطَّرْفَ نَبَاتُهُ وَاسْتِوَاؤُهُ وَاسْتِحْصَادُهُ وَتَكْوِيرُهُ أَمْثَالَ الجِبَالِ، فَيَقُولُ اللَّهُ تَعَالَى: دُونَكَ يَا ابْنَ آدَمَ، فَإِنَّهُ لاَ يُشْبِعُكَ شَيْءٌ “، فَقَالَ الأَعْرَابِيُّ: يَا رَسُولَ اللَّهِ، لاَ تَجِدُ هَذَا إِلَّا قُرَشِيًّا أَوْ أَنْصَارِيًّا، فَإِنَّهُمْ أَصْحَابُ زَرْعٍ، فَأَمَّا نَحْنُ فَلَسْنَا بِأَصْحَابِ زَرْعٍ، فَضَحِكَ رَسُولُ اللَّهِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.