தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7520

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 39

அல்லாஹ் (தன்னை வழிபடுமாறு) கட்டளையிடுவதன் மூல(மும் அதற்குப் பிரதிபலன் வழங்குவதன் மூலமு)ம் தன் அடியார்களை நினைவுகூர்கின்றான்; மன்றாடிப் பிரார்த்திப்பதன் மூலமும் தூதுத்துவத்தை ஏற்றுப் பிரசாரம் செய்வதன் மூலமும் அல்லாஹ்வை அடியார்கள் நினைவுகூர்கின்றனர்.

அல்லாஹ் கூறுகின்றான்:

என்னை நீங்கள் நினைவுகூருங்கள். உங்களை நான் நினைவுகூர்கின்றேன். (2:152)

மேலும், (நபியே!) இவர்களுக்கு நூஹுடைய செய்தியை எடுத்துரைப்பீராக! அவர் தம் சமுதாயத்தாரை நோக்கிக் கூறினார்: என் சமுதாயத்தாரே! நான் உங்களிடையே வாழ்வதையும் அல்லாஹ்வின் வசனங்களை (அவ்வப்போது) நான் எடுத்துரைத்து நினைவூட்டிக் கொண்டிருப்பதையும் உங்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றால் அறிந்துகொள்ளுங்கள்: நான் அல்லாஹ்வையே சார்ந்திருக்கின்றேன். நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட கடவுளர்களின் உதவியைப் பெற்று உங்களுக்கிடையே ஒரு தீர்மானத்திற்கு வாருங்கள். பிறகு அந்தத் தீர்மானம் உங்களுக்குக் கவலையளித் திடாதவாறு பார்த்துக் கொண்டு பின்னர், அதை எனக்கு எதிராகச் செயல்படுத்துங்கள். மேலும், எனக்கு சற்றும் அவகாசம் அளிக்காதீர்கள். நீங்கள் என் நல்லுரையைப் புறக்கணித்தால் (எனக்கு ஒன்றும் இழப்பு ஏற்பட்டுவிடாது). நான் உங்களிடம் கூலி எதையும் கேட்கவில்லை. என்னுடைய கூலி அல்லாஹ்விடமே உள்ளது. (எவர் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும்) நான் இறைவனுக்கு அடிபணிந்து வாழ்பவனாக விளங்க வேண்டும் என்றே கட்டளையிடப்பட்டுள்ளேன் (10:71, 72).

(நபியே!) இணைவைப்பாளர்களில் ஒருவர் உங்களிடம் வந்து அடைக்கலம் கோரினால், அவர் இறைவசனங்களைச் செவியேற்கும் வரை அடைக்கலம் தந்து, பின்னர் அவரைப் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவையுங்கள் (9:6). அதாவது ஒரு மனிதர் உங்களிடம் வந்து, நீங்கள் கூறுவதையும் இறைவன் உங்களுக்கு அருளியதையும் செவியேற்று இறைநம்பிக்கை கொண்டால் சரி; இல்லையேல், அவரை அவருக்குரிய பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவிடுங்கள். அங்கு அவரிடம் மகத்தான செய்தி -குர்ஆன்- வரும். அவர் இம்மையில் உண்மையே பேசி, அதன்படி செயல்படட்டும்- என முஜாஹித் (ரஹ்) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.

பாடம் : 40

ஆகவே, அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள் எனும் (2:22ஆவது) இறைவசனமும், அல்லாஹ் மக்களின் செயல்களையும் முயற்சிகளையும் படைப்பது தொடர்பாகக் கூறப்பட்டுள்ளவையும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

(நபியே! அவர்களிடம் கேளுங்கள்:) பூமியை இரண்டே நாட்களில் படைத்த (இறை)வனை நிராகரித்து மற்றவர்களை அவனுக்கு இணையாக்குகின்றீர்களா? அவன் தானே அகில உலகங்களுக்கும் இறைவன்?(41:9)

(நபியே!) உங்களுக்கும் உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கும், இறைவனுக்கு இணை வைத்தால் உங்கள் நற்செயல் வீணாகிவிடும்; மேலும், நீங்கள் இழப்புக்குரியவராய் ஆகிவிடுவீர்கள்; ஆகவே,அல்லாஹ்வையே வணங்கி நன்றிசெலுத்துவோரின் குழுவில் சேர்ந்திருங்கள் என்று வஹீ அறிவிக்கப்பட்டுள்ளது. (39: 65, 66)

மேலும், அவர்கள் (-நல்லடியார்கள்) எத்தகையவர்கள் என்றால், அல்லாஹ்வுடன் வேறெந்தக் (கற்பனைக்) கடவுளையும் அழைக்க மாட்டார்கள். (25:68) இதற்கு விரிவுரையாக இக்ரிமா (ரஹ்) அவர்கள், அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தபடியேதான் அவன் மீது நம்பிக்கைகொள்கிறார்கள் எனும் (12:106ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள். மேலும், (நபியே!) அவர்களைப் படைத்தவன் யார்? வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்?என்று நீங்கள் அவர்களிடம் கேட்டால் அவர்கள், அல்லாஹ்’ என்றே சொல்வார்கள் எனும் வசனங்களை (43:87; 31.25) ஓதி, அது தான் அவர்களின் இறைநம்பிக்கையாகும்; அவர்கள் அல்லாஹ் அல்லாதவரை வணங்கிக் கொண்டிருப்பார்கள் என்று கூறினார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்:

அவனே அனைத்துப் பொருட்களையும் படைத்து, அவற்றுக்கு வேண்டியதை நிர்ணயித்தான். (25:2) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: வானவர்கள் உண்மையைக் கொண்டே இறங்குகிறார்கள் (15:8). அதாவது தூதுத்துவச் செய்தி மற்றும் வேதனையைக் கொண்டு இறங்குகிறார்கள். உண்மையாளர்களிடம் அவர்களின் உண்மை குறித்து இறைவன் விசாரணை செய்ய வேண்டும் என்பதற்காக எனும் (33:86 ஆவது) வசனத்திலுள்ள உண்மையாளர்கள்’ என்பது, அல்லாஹ்வின் செய்தியை எடுத்துரைத்து மக்களிடம் கொண்டுவந்து சேர்க்கும் இறைத்தூதர்களைக் குறிக்கும்.

அல்லாஹ் கூறுகின்றான்: மேலும் நாமே அதைப் பாதுகாப்போம் (15:9). உண்மையைக் கொண்டுவந்தவர் (39:33). அதாவது குர்ஆனைக் கொண்டுவந்தவர். அதை இறைநம்பிக்கையாளர்கள் உண்மை என ஏற்றார்கள். அவர்கள் மறுமைநாளில் இது தான் நீ அளித்தது;இதன்படியே நான் செயல்பட்டேன் என்று கூறுவர்.

 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நான், ‘அல்லாஹ்விடம் மிகப்பெரிய பாவம் எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, நீ அவனுக்கு இணைவைப்பதாகும்’ என்று பதிலளித்தார்கள். நான், ‘நிச்சயமாக அது பெரும்பாவம்தான்’ என்று சொல்லிவிட்டுப் ‘பின்னர் எது?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘உன் குழந்தை உன்னுடன் உணவு உண்ணும் என்றஞ்சி அதை நீ கொன்றுவிடுவதாகும்’ என்றார்கள். நான், ‘பிறகு எது?’ என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘பிறகு உன் அண்டை வீட்டாரின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவதாகும்’ என்று பதிலளித்தார்கள்.162

Book : 97

(புகாரி: 7520)

بَابُ ذِكْرِ اللَّهِ بِالأَمْرِ، وَذِكْرِ العِبَادِ بِالدُّعَاءِ، وَالتَّضَرُّعِ وَالرِّسَالَةِ وَالإِبْلاَغِ

لِقَوْلِهِ تَعَالَى: {فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ} [البقرة: 152]، {وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ نُوحٍ إِذْ قَالَ لِقَوْمِهِ: يَا قَوْمِ إِنْ كَانَ كَبُرَ عَلَيْكُمْ مَقَامِي وَتَذْكِيرِي بِآيَاتِ اللَّهِ فَعَلَى اللَّهِ تَوَكَّلْتُ، فَأَجْمِعُوا أَمْرَكُمْ وَشُرَكَاءَكُمْ، ثُمَّ لاَ يَكُنْ أَمْرُكُمْ عَلَيْكُمْ غُمَّةً ثُمَّ اقْضُوا إِلَيَّ، وَلاَ تُنْظِرُونِ فَإِنْ تَوَلَّيْتُمْ فَمَا سَأَلْتُكُمْ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى اللَّهِ، وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ المُسْلِمِينَ} [يونس: 72] ” غُمَّةٌ: هَمٌّ وَضِيقٌ ” قَالَ مُجَاهِدٌ: «اقْضُوا إِلَيَّ مَا فِي أَنْفُسِكُمْ»، يُقَالُ: افْرُقْ اقْضِ وَقَالَ مُجَاهِدٌ: {وَإِنْ أَحَدٌ مِنَ المُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلاَمَ اللَّهِ} [التوبة: 6] ” إِنْسَانٌ يَأْتِيهِ، فَيَسْتَمِعُ مَا يَقُولُ وَمَا أُنْزِلَ عَلَيْهِ، فَهُوَ آمِنٌ حَتَّى يَأْتِيَهُ فَيَسْمَعَ كَلاَمَ اللَّهِ، وَحَتَّى يَبْلُغَ مَأْمَنَهُ حَيْثُ جَاءَهُ، النَّبَأُ العَظِيمُ: «القُرْآنُ»، {صَوَابًا} [النبأ: 38]: «حَقًّا فِي الدُّنْيَا، وَعَمَلٌ بِهِ»

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {فَلاَ تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا} [البقرة: 22]

وَقَوْلِهِ جَلَّ ذِكْرُهُ: {وَتَجْعَلُونَ لَهُ أَنْدَادًا ذَلِكَ رَبُّ العَالَمِينَ} [فصلت: 9]، وَقَوْلِهِ: {وَالَّذِينَ لاَ يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ} [الفرقان: 68]، {وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الخَاسِرِينَ، بَلِ اللَّهَ فَاعْبُدْ وَكُنْ مِنَ الشَّاكِرِينَ} [الزمر: 66] وَقَالَ عِكْرِمَةُ: {وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُمْ بِاللَّهِ إِلَّا وَهُمْ مُشْرِكُونَ} [يوسف: 106]، {وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَهُمْ} [الزخرف: 87]، وَ {مَنْ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ} «فَذَلِكَ إِيمَانُهُمْ، وَهُمْ يَعْبُدُونَ غَيْرَهُ» وَمَا ذُكِرَ فِي خَلْقِ أَفْعَالِ العِبَادِ وَأَكْسَابِهِمْ ” لِقَوْلِهِ تَعَالَى: {وَخَلَقَ كُلَّ شَيْءٍ فَقَدَّرَهُ تَقْدِيرًا} [الفرقان: 2] وَقَالَ مُجَاهِدٌ: (مَا تَنَزَّلُ المَلاَئِكَةُ إِلَّا بِالحَقِّ): «بِالرِّسَالَةِ وَالعَذَابِ» {لِيَسْأَلَ الصَّادِقِينَ عَنْ صِدْقِهِمْ} [الأحزاب: 8]: «المُبَلِّغِينَ المُؤَدِّينَ مِنَ الرُّسُلِ»، {وَإِنَّا لَهُ لَحَافِظُونَ} [يوسف: 12]: «عِنْدَنَا»، {وَالَّذِي جَاءَ بِالصِّدْقِ} [الزمر: 33]: «القُرْآنُ» {وَصَدَّقَ بِهِ} [الزمر: 33]: ” المُؤْمِنُ يَقُولُ يَوْمَ القِيَامَةِ: هَذَا الَّذِي أَعْطَيْتَنِي عَمِلْتُ بِمَا فِيهِ

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ

سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَيُّ الذَّنْبِ أَعْظَمُ عِنْدَ اللَّهِ؟ قَالَ: «أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا، وَهُوَ خَلَقَكَ»، قُلْتُ: إِنَّ ذَلِكَ لَعَظِيمٌ، قُلْتُ: ثُمَّ أَيُّ؟ قَالَ: «ثُمَّ أَنْ تَقْتُلَ وَلَدَكَ تَخَافُ أَنْ يَطْعَمَ مَعَكَ»، قُلْتُ: ثُمَّ أَيُّ؟ قَالَ: «ثُمَّ أَنْ تُزَانِيَ بِحَلِيلَةِ جَارِكَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.