தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7551

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 54 (மக்கள்) நல்லுணர்வு பெறுவதற்காகவே இந்தக் குர்ஆனை நாம் எளிதாக்கியுள் ளோம். எனவே,நல்லுணர்வு பெறுவோர் உண்டா? எனும் (54:17ஆவது) இறை வசனம். நபி (ஸல்) அவர்கள், ஒவ்வொருவரும் எ(தை அடைவ)தற்காகப் படைக்கப் பட்டார்களோ அதற்கு வாய்ப்பளிக்கப்படு கிறார்கள் என்று கூறினார்கள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் (மேற்கண்ட வசனத்திற்கு) உமது நாவால் அதை ஓதிக் காட்டுவதை எளிதாக்கியுள்ளோம் என்று (விளக்கம்) கூறினார்கள். ம(த்)தர் அல்வர்ராக் (ரஹ்) அவர்கள் நல்லுணர்வு பெறுவோர் உண்டா? என்பதற்குக் கல்வியைத் தேடுவோர் உண்டா? அவர்களுக்கு உதவி நல்கப்படும் என விளக்கமளித்துள்ளார்கள்.

 இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.

நான், ‘இறைத்தூதர் அவர்களே! நற்செயல் புரிபவர்கள் எதற்காக நற்செயல் புரியவேண்டும்? (இன்னார் சொர்க்கவாசி, இன்னார் நரகவாசி என்பது முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டதே?)’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘ஒவ்வொருவரும் எ(தை அடைவ)தற்காகப் படைக்கப்பட்டார்களோ அதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறார்கள்’ என்று பதிலளித்தார்கள்.191

Book : 97

(புகாரி: 7551)

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَلَقَدْ يَسَّرْنَا القُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ} [القمر: 17]

وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ لَهُ» يُقَالُ مُيَسَّرٌ: مُهَيَّأٌ ” وَقَالَ مُجَاهِدٌ: ” يَسَّرْنَا القُرْآنَ بِلِسَانِكَ: هَوَّنَّا قِرَاءَتَهُ عَلَيْكَ ” وَقَالَ مَطَرٌ الوَرَّاقُ: {وَلَقَدْ يَسَّرْنَا القُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ} [القمر: 17]، قَالَ: «هَلْ مِنْ طَالِبِ عِلْمٍ فَيُعَانَ عَلَيْهِ»

حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، قَالَ يَزِيدُ: حَدَّثَنِي مُطَرِّفُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عِمْرَانَ، قَالَ

قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، فِيمَا يَعْمَلُ العَامِلُونَ؟ قَالَ: «كُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ لَهُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.