தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7555

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 56

அல்லாஹ்தான் உங்களையும் நீங்கள் செய்கின்றவற்றையும் படைத்தான் எனும் (37:96ஆவது) இறைவசனம்.

அல்லாஹ் கூறுகின்றான்:

ஒவ்வொரு பொருளையும் நாம் ஓர் அளவின்படி (விதியின்படி)யே படைத்துள்ளோம். (54:49)

(உயிரினங்களின் உருவங்களை) படைப்போரிடம் (மறுமையில்) நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் என்று கூறப்படும்.

நிச்சயமாக, உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் ஆறே நாட்களில் படைத்தான். பிறகு அரியாசனம் (அர்ஷ்) மீதமர்ந்து (ஆட்சி செய்து) கொண்டுள்ளான். அவனே இரவால் பகலை மூடுகின்றான். அது பகலைப் பின்தொடர்ந்து விரைகின்றது. சூரியன், சந்திரன், விண்மீன்கள் ஆகியவற்றைத் தனது கட்டளைக்குக் கட்டுப்படக்கூடியவைகளாக அமைத்தான். அவனுக்கே ஆக்கமும் ஆட்சியும் உரியது. அகிலத்தாரின் அதிபதியான அல்லாஹ் வளமிக்கவன் ஆவான். (7:54)

இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அறிக, படைக்கும் ஆற்றலும் கட்டளையிடும் அதிகாரமும் அவனுக்குரியன எனும் தனது சொல்லின் மூலம் படைத்தலும், அதற்காகக் கட்டளையிடுவதும் (இரண்டும் தனித் தனிச்செயல்தான் என்பதை) வித்தியாசப் படுத்தி அல்லாஹ் தெளிவுபடுத்திவிட்டான். நபி (ஸல்) அவர்கள் இறைநம்பிக்கை (ஈமான்) கொள்வதையும் ஒரு செயல் என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்களும் அபூதர் (ரலி) அவர்களும் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்களிடம் செயல்களில் சிறந்தது எது? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை நம்புவதும் அவனது பாதையில் அறப்போர் புரிவதும் ஆகும் என்று பதிலளித்தார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் செய்து கொண்டிருந்த நன்மைக்குப் பிரதி பலனாக சொர்க்கத்தில் என்றென்றும் தங்குவார்கள். (46:14)

நபி (ஸல்) அவர்களிடம் அப்துல் கைஸ் குலத்தார் எந்தக் கட்டளைகளின்படி செயலாற்றினால் நாங்கள் சொர்க்கம் புக முடியுமோ அத்தகைய கட்டளைகள் சிலவற்றை எங்களுக்கு அளியுங்கள் என்று கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும்படியும் அதற்கு சான்று பகரும்படியும் தொழுகையை நிலை நாட்டி, ஸகாத் வழங்கும்படியும் அவர்களுக் குக் கட்டளையிட்டார்கள். இவையனைத்தையுமே செயல்கள்’ என்றே கருதினார்கள்.

 ஸஹ்தம் இப்னு முளர்ரிப் அல்ஜர்மீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

ஜர்ம் குலத்தாரைச் சேர்ந்த இந்தக் குடும்பத்தாருக்கும் அஷ்அரீ குலத்துக்குமிடையே நேசமும் சகோதரத்துவ உறவும் இருந்து வந்தது. நாங்கள் அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்களுக்குக் கோழி இறைச்சியுடன் உணவு பரிமாறப்பட்டது. அன்னாருடன் பனூ தைமுல்லாஹ் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரும் இருந்தார். அவர் விடுதலை செய்யப்பட்ட அடிமைகளில் ஒருவர் போன்றிருந்தார். அவரை அபூ மூஸா (ரலி) அவர்கள் உணவுண்ண அழைத்தார்கள். அப்போது அவர், ‘இந்தக் கோழி (இனம், அசுத்தம்) எதையோ தின்பதைக் கண்டு அதனால் அருவருப்படைந்து அதை உண்ண மாட்டேன் என்று நான் சத்தியம் செய்து விட்டேன்’ என்று கூறினார். அதைக் கேட்ட அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி) கூறினார்:

இங்கே வா! நான் உனக்கு இதைப் பற்றி (விவரமாக)த் தெரிவிக்கிறேன். நான் நபி (ஸல்) அவர்களிடம் (என்) அஷ்அரீகுலத்தார் சிலருடன் வாகனம் கேட்டுச் சென்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை வாகனம் எதிலும் ஏற்றியனுப்பமாட்டேன். உங்களை ஏற்றியனுப்ப என்னிடம் வாகனம் எதுவுமில்லை’ என்றார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் போரில் கிடைத்த ஒட்டகங்கள் சில கொண்டுவரப்பட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களைப் பற்றி ‘அஷ்அரீ குலத்து ஆட்கள் எங்கே?’ என்று கேட்டுவிட்டு, ‘வெள்ளைத் திமில்கள் கொண்ட ஐந்து ஒட்டக மந்தைகளை எங்களுக்கு வழங்கும்படி உத்தரவிட்டார்கள். பிறகு நாங்கள் சென்றுவிட்டோம். (என்றாலும்,) ‘நாம் என்ன காரியம் செய்துவிட்டோம்? இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘நம்மை வாகனத்தில் ஏற்றி அனுப்பமாட்டேன் என்றும், தம்மிடம் நமக்கு வழங்க வாகனம் இல்லை என்றும் சத்தியம் செய்தார்கள். பிறகு நமக்கு வாகனம் வழங்கிவிட்டார்களே! நாம் இறைத்தூதர் (ஸல்) அவர்களை, அவர்களின் சத்தியத்திலிருந்து கவனத்தைத் திருப்பி விட்டோம். அல்லாஹ்வின் மீதாணையாக! நாம் ஒருபோதும் வெற்றியடையமாட்டோம். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்று இதைப் பற்றிக் கூறினோம். அதற்கு அவர்கள் ‘உங்களை நான் (வாகனத்தில்) ஏற்றியனுப்பவில்லை; உங்களை அல்லாஹ்வே ஏற்றியனுப்பினான். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு சத்தியம் செய்து அஃதல்லாத வேறொன்று அந்தச் சத்தியத்தைவிடச் சிறந்ததாக எனக்குத் தென்பட்டால் அந்த வேறொன்றையே செய்வேன். சத்தியத்தை முறித்து, அதற்காகப் பரிகாரமும் செய்து விடுவேன்’ என்றார்கள். 194

Book : 97

(புகாரி: 7555)

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَاللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ} [الصافات: 96]

{إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ} [القمر: 49] وَيُقَالُ لِلْمُصَوِّرِينَ: «أَحْيُوا مَا خَلَقْتُمْ» {إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ، ثُمَّ اسْتَوَى عَلَى العَرْشِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ، يَطْلُبُهُ حَثِيثًا وَالشَّمْسَ وَالقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ، أَلاَ لَهُ الخَلْقُ وَالأَمْرُ تَبَارَكَ اللَّهُ رَبُّ العَالَمِينَ} قَالَ ابْنُ عُيَيْنَةَ: «بَيَّنَ اللَّهُ الخَلْقَ مِنَ الأَمْرِ، لِقَوْلِهِ تَعَالَى»: {أَلاَ لَهُ الخَلْقُ وَالأَمْرُ} [الأعراف: 54] وَسَمَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الإِيمَانَ عَمَلًا قَالَ أَبُو ذَرٍّ، وَأَبُو هُرَيْرَةَ: سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الأَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: «إِيمَانٌ بِاللَّهِ وَجِهَادٌ فِي سَبِيلِهِ» وَقَالَ: {جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ} [السجدة: 17] وَقَالَ وَفْدُ عَبْدِ القَيْسِ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مُرْنَا بِجُمَلٍ مِنَ الأَمْرِ، إِنْ عَمِلْنَا بِهَا دَخَلْنَا الجَنَّةَ، فَأَمَرَهُمْ [ص:161] بِالإِيمَانِ وَالشَّهَادَةِ، وَإِقَامِ الصَّلاَةِ وَإِيتَاءِ الزَّكَاةِ «فَجَعَلَ ذَلِكَ كُلَّهُ عَمَلًا»

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، وَالقَاسِمِ التَّمِيمِيِّ، عَنْ زَهْدَمٍ، قَالَ

كَانَ بَيْنَ هَذَا الحَيِّ مِنْ جُرْمٍ وَبَيْنَ الأَشْعَرِيِّينَ وُدٌّ وَإِخَاءٌ، فَكُنَّا عِنْدَ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ فَقُرِّبَ إِلَيْهِ الطَّعَامُ، فِيهِ لَحْمُ دَجَاجٍ وَعِنْدَهُ رَجُلٌ مِنْ بَنِي تَيْمِ اللَّهِ كَأَنَّهُ مِنَ المَوَالِي، فَدَعَاهُ إِلَيْهِ فَقَالَ: إِنِّي رَأَيْتُهُ يَأْكُلُ شَيْئًا فَقَذِرْتُهُ فَحَلَفْتُ لاَ آكُلُهُ، فَقَالَ: هَلُمَّ فَلْأُحَدِّثْكَ عَنْ ذَاكَ: إِنِّي أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَفَرٍ مِنَ الأَشْعَرِيِّينَ نَسْتَحْمِلُهُ، قَالَ: «وَاللَّهِ لاَ أَحْمِلُكُمْ وَمَا عِنْدِي مَا أَحْمِلُكُمْ»، فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَهْبِ إِبِلٍ، فَسَأَلَ عَنَّا، فَقَالَ: «أَيْنَ النَّفَرُ الأَشْعَرِيُّونَ؟»، فَأَمَرَ لَنَا بِخَمْسِ ذَوْدٍ غُرِّ الذُّرَى، ثُمَّ انْطَلَقْنَا قُلْنَا: مَا صَنَعْنَا حَلَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ لاَ يَحْمِلَنَا وَمَا عِنْدَهُ مَا يَحْمِلُنَا؟ ثُمَّ حَمَلَنَا تَغَفَّلْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمِينَهُ وَاللَّهِ لاَ نُفْلِحُ أَبَدًا، فَرَجَعْنَا إِلَيْهِ فَقُلْنَا لَهُ: فَقَالَ: «لَسْتُ أَنَا أَحْمِلُكُمْ، وَلَكِنَّ اللَّهَ حَمَلَكُمْ، وَإِنِّي وَاللَّهِ لاَ أَحْلِفُ عَلَى يَمِينٍ فَأَرَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا إِلَّا أَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ مِنْهُ وَتَحَلَّلْتُهَا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.